பார்வை சவால் சிறாருக்கான கதைகள் | நட்சத்திரக் குழந்தைகள் 04

பார்வை சவால் சிறாருக்கான கதைகள் | நட்சத்திரக் குழந்தைகள் 04
Updated on
2 min read

“ஒரு பெரிய யானை அசைந்து அசைந்து வந்ததாம்...” எனச் சொன்னதும் குழந்தைகளின் கண்கள் விரியும். மனக் கண் ஒளியில் கதைகளை உணரும் பார்வைக் குறைபாடு டைய சிறார்களைக் கதைகள் சென்றடைவது எப்படி? பார்வை சவால் கொண்ட சிறாரின் புற உலகம் அவர்கள் தொடும் தூரம்வரை மட்டுமே.

அதுவே கதைகள், அவர்கள் பார்த்திராத சூரியன், மேகங்கள், காடுகள், கடல்களைப் பற்றி விவரிக்கும் வர்ணனைகள் அவர்களின் மூளையில் ஒரு பிம்பத்தை உருவாக்குகின்றன. இது அவர்களின் கற்பனைத் திறனை அபரிமிதமாக வளர்க் கிறது.

நேரடி அனுபவம் மூலம் கற்க முடியாத பல புதிய சொற்களைக் கதைகள் வழியாகக் கற்க இயலும். குறிப்பாக, பிரெய்ல் புத்தகங்கள் வழியாகக் கதைகளை வாசிக்கும்போது, சொற்களின் எழுத்து அமைப்பு, நிறுத்தற்குறி, இலக்கணத்தை அவர்கள் துல்லியமாகக் கற்க முடிகிறது.

திசை, தூரம் பற்றிய புரித லைக் கதைகள் தருகின்றன. “முயல் வலது பக்கம் ஓடியது”, “பறவை உயரத்தில் பறந்தது” என்பது போன்ற வரிகள், குழந் தைகள் தங்களைச் சுற்றியுள்ள வெளியைப் புரிந்துகொள்ள உதவுகின்றன. இது அவர்கள் தன்னிச்சையாக செயல்படுவதற்கும் மறைமுகமாக உதவி செய்கிறது. கதைகளில் வரும் “ஏன்?”, “எப்படி?” என்கிற கேள்விகள் தர்க்கரீதியான சிந்தனையைத் தூண்டுகின்றன.

கதை சொல்வது யார்? - மருத்துவ சிகிச்சை, கற்றல் சவால்கள், பணநெருக்கடி என அன்றாடம் அல்லாடும் நிலையில் சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர் உள்ளனர். இதனால் கதைகள் சூழ்ந்த இளம் பருவத்தைப் பார்வைக் குறைபா டுடைய குழந்தைகளுக்கு அவர்கள் அளிப்பது அரிது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, அரசுப் பள்ளிகளுக்கான பாடப்புத்தகங்கள் பிரெய்லில் வடி வமைக்கப்பட்டுள்ளன. மற்றபடி கதைப் புத்தகங்கள், நாவல்கள், கலைக்களஞ்சியங்கள் அவர்களுக்கு ஏற்றாற்போல் வடிவமைக்கப்படுவது அரிது.

தற்போது ஆடியோ புத்த கங்கள் அதிகரித்திருந்தா லும், அவை அனைத்தும் சிறார்களுக்கு ஏற்ற வகையில் இல்லை. வெறும் வாசிப்பாக இல்லாமல், கதை சொல்லும் பாணியில், பின்னணி ஒலிக ளுடன் கூடிய தரமான ஆடியோ கதைகள் தமிழில் மிகக் குறைவு.

ஒரு படத்தின் உருவத்தை விரல்களால் தடவி உணரும் வகையில் வடிவமைக்கப்பட்ட தொட்டுணரக் கூடிய புத்தகங்கள் அரிது. அதிலும், கிராமப்புறங்களில் உள்ள குழந்தைகளால் டிஜிட்டல் கதைகளைப் பெற முடிவதில்லை.

‘சுக்மயா புஸ்தகாலயா' போன்ற இணையவழி நூலகங்கள் புத்தகங்களை மின்னணு முறையில் வழங்கினாலும், அவற்றில் சிறார் களுக்கான கதைப் புத்தகங்கள் குறைவு.

புத்தகச்சந்தையில்.. பார்வைக் குறைபாடுடைய சிறாருக்கான நூல்கள் பொதுவான புத்தகக் கடைகளில் கிடைப்பதில்லை. வழக்கமான நூல்களைக் காட்டிலும் பிரெய்ல் நூல்களை அச்சிட அதிகத் தடிமனான தாள்களும், பிரத்யேக அச்சு இயந்திரங்களும் தேவை.

இதனால் இவற்றின் விலை மிக அதிகம். மேலும் நூலகங்களில், புத்தகக் கண்காட்சிகளில் இவர்களுக்கான தனிப் பிரிவுகள் மிகக் குறைவு. ஆங்கிலத்தில் ஓரளவுக்குக் கதைப் புத்தகங்கள் பிரெய்லில் கிடைக்கின்றன. அதுவே தமிழில் சிறாருக்கான நாட்டுப்புறக் கதைகள், நவீனச் சிறார் கதைகளும் பிரெய்ல் வடிவில் கிடைப்பது மிகக் குறைவு.

வாசிப்பு விழிகளுக்கானது மட்டுமல்ல, அது மனதிற்கானது. மற்ற சிறார் வண்ணப் படங்களையும், பெரிய எழுத்துக் களையும் கொண்ட புத்தகங்களைக் கண்டு மகிழும்போது, பார்வைக் குறைபாடுடைய சிறார் தங்களுக்குரிய புத்தகங்களுக்காகக் காத்திருக்கிறார்கள்.

(ஒளிரும்)

- கட்டுரையாளர்: முனைவர், பார்வைக் குறைபாடுடைய நபர்களின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனத்தின் சென்னை மண்டல மையத்தின் உதவி பேராசிரியர்; revbest15@gmail.com

புதிய வெளிச்சம்! - பார்வைக் குறை பாடுடைய சிறாரின் உலகத்தைக் கதைகளால் வண்ணமய மாக்கும் நோக்கத் துடன் ‘விழி ஒளி' அமைப்பு இயங்கி வருகிறது. பூந்தமல்லி, பர்கூரில் உள்ள அரசுப் பார்வையற்றோர் பள்ளிகளில், ஞாயிறுதோறும் இந்த அமைப்புடன் இணைந்து தன்னார்வலர்கள் மூலம் கதை சொல்லும் நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.

‘விழி ஒளி’யின் சீரிய முயற்சியால், எழுத்தாளர் விழியனின், ‘பென்சில்களின் அட்டகாசம்’, ‘கடல்’, ‘சகி வளர்த்த ஒகி’ ஆகிய சிறார் நூல்கள் பிரெய்ல் வடிவம் பெற்றுள்ளன. சென்னை 49ஆவது புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்ட இந்நூல்கள், தற்போது தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பார்வைக் குறைபாடுடைய குழந்தைகளைச் சென்றடைந்து கொண்டிருக்கின்றன.

பிரெய்ல் புத்தகங்களுடன் சேர்த்து, கதையில் வரும் ஓவியங்களைத் தடவிப் பார்த்து அறியும் தொடுஉணர் ஓவியங்களாக மாற்றவும், அணுகல் வசதியுடைய மின் புத்தகங்களாக மாற்றவும் அடுத்தடுத்த செயல்பாடுகளை ‘விழி ஒளி’ முன்னெடுக்க உள்ளது.

விழி ஒளி, சென்னை, தொடர்புக்கு: 80725 06708

பார்வை சவால் சிறாருக்கான கதைகள் | நட்சத்திரக் குழந்தைகள் 04
சிறப்புக் கழிப்பறை யாருக்கானது? | நட்சத்திரக் குழந்தைகள் 03

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in