குடியரசின் தொடக்க விழா: உலக அமைதிக்கு பங்களிப்பு

குடியரசின் தொடக்க விழா: உலக அமைதிக்கு பங்களிப்பு
Updated on
1 min read

(சர் பி.என்.ராவ், ஐ.நா.சபைக்கானஇந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி)

சுதந்திர இறையாண்மைக் குடியரசாக இந்தியாவை அமைக்க அரசியலமைப்பு சபை 3 ஆண்டுகளுக்கு முன் தீர்மானித்தது. அரசியல் சாசன சபையின் தீர்மானத்தை நாடாளுமன்றம் இரண்டு மாதங்களுக்கு முன் அங்கீகரித்தது. இப்போது அது உண்மையாகி விட்டது. இப்போது இந்தியா உலகின் மிகப்பெரிய குடியரசுகளின் ஒன்றாகி உள்ளது. எதிர்காலம் என்ன கொண்டு வரும் என்ற கவலை சிறிதும் இல்லாத நிகழ்வாக இருந்தாலும் இயற்கையாக இது சில கேள்விகளை எழுப்புகிறது.

நமது புதிய அரசியல் சாசனம் ஏற்கெனவே இருந்ததில் இருந்து எந்த வகையில் வேறுபட்டது என்று கேட்கப்பட்டது. 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி நாடு விடுதலை அடைந்தபோது இந்தியாவில் சிறிதும் பெரிதுமாக 500-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் இருந்தன. அவை சர்வாதிகாரமாக இருந்தன.

மத்திய அரசுடன் அவற்றுக்கு நல்லுறவும் இல்லை. ஆனால், புதிய அரசியல் சாசனம் அந்த சமஸ்தானங்களின் எண்ணிக்கை 20 என்ற அளவுக்கு குறைந்தது. மேலும், மத்திய அரசுடன் அவை இணக்கமான நல்லுறவைக் கொண்டிருக்கின்றன. இதுவே, நமது அரசியல் சாசனம் அளித்துள்ள முக்கியமான பலனாகும். ஏற்கெனவே பிரிட்டிஷ் இந்தியா என்று அழைக்கப்பட்ட நமது நாடு, அரசியல் சாசனத்தின் மூலம் ‘இந்தியரின் இந்தியா’ என்று உருவாகி உள்ளது.

குடியரசு ஆகி இருப்பதன் மூலம் உலக அரங்கில் இந்தியாவின் கவுரவமும் பொறுப்புகளும் அதிகரித்துள்ளது. நமக்கு சில பிரச்சினைகள் தோன்றி உள்ளன. புதிதாக உருவாகி உள்ள சீன அரசு ஐ.நா.சபையில் பிரச்சினை எழுப்புகிறது. சோவியத் யூனியன் பிரதிநிதிகள் சீனாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாதுகாப்பு கவுன்சிலில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். உலகில் அமைதியை கொண்டுவரும் பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளது. அதில் இந்தியா வெற்றி பெற இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவரும் இந்த நாளில் பிரார்த்திப்போம்.

(‘தி இந்து’ 26-1-1950)

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in