

ஆசைக்கு சக்தி உண்டா..? இதயத்திலும் உணர்விலும்
துவங்கிய
ஆசைக்கு சக்தி உண்டு..!!
கனவுகளுக்கு சக்தி உண்டா..?
தூய்மையும் வலுவும் கொண்ட கனவுகளுக்கு சக்தி உண்டு.!
அபார சக்தி உண்டு...!
கனவுகளை விதைத்தவராம்.
கனவுகளை காணுங்கள் என்றவராம்.
குழந்தைகளின் முகங்களில் புன்னகையை வரவழைத்தவராம்.
அக்னி நாயகன் அப்துல் கலாம்
விரும்பி மதித்த பணி
ஆசிரியர் பணியைத்தான்..!
சாந்தமான முகம்,
மென்மையான பேச்சு,
மேடைதோறும் மாணவர்களின் கேள்விக் கணைகள்.,
எளிமையான மொழியில்
சிரித்த முகத்துடன்
பதில் சொல்லும் இவர்
கலாம் எனும் ஆசிரியர்.
கேள்விகள் கேட்பதை ஊக்குவித்தவராம்
அறிவியல் பாடத்தை
விரும்பியவராம்,
பதில்களில் நம்பிக்கை
தந்தவராம்
தாய்மொழியில் கற்றவராம்,
குழந்தைகளை தாய் மொழியில்
பேசத் தூண்டியவராம்.
துடிப்புமிக்க குழந்தைகளின்
பதட்டத்தை போக்கி
ஆசுவாசப் படுத்தியவராம்.
துன்பத்தைக் கண்டு
பயப்படக்கூடாது என்றவராம்,
புத்தன், காந்தி பிறந்த
நாட்டை ஏவுகணை
வலிமைமிக்க
நாடாக மாற்றியவராம்
கலாம் எனும் ஆசிரியர்.
மாணவர்களே இந்தியாவின் வலிமை.
ஆசிரியர்களே அவர்களுக்கான வழிகாட்டி
நான் ஒரு ஆசிரியன் என்று சொல்வதிலேயே பெருமை கொள்கிறேன் என்றவர்.
ஆகாயத்தில் பறந்த இந்த
ராமேஸ்வர முதல் குழந்தை
நான் ரசித்த கலாம் எனும் ஆசிரியர்.
எனக்கு ஒரு கனவு உண்டு
கனவைத் தொடர நான்
அறிவைப் பெறுவேன்.
கடினமாக விடாமுயற்சியுடன் உழைப்பேன் என்று சொல்
நீ ஒரு மாணவனாக இருந்தால் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும்.
உன் வேலையும் அதுதான்.
உன் கடமையும் அதுதான்
என்று மாணவர்களுக்கு
உணர்த்திய கலாம்
நான் ரசித்த ஆசிரியர்.
இந்தியாவின் பெருமைமிகு விஞ்ஞான மூளை
இந்தக் கடைசி பெஞ்சு
மாணவன் ஏபிஜெ அப்துல் கலாம்
நான் ரசித்த ஆசிரியர்.
ரா.ராணி குணசீலி
ஆசிரியை
அரசு மேல்நிலைப் பள்ளி
த.அய்யங்கோட்டை,
மதுரை