

கண்ணனின் அம்மா இட்லி வியாபாரம் செய்து வந்தாள். தினமும் வரும் பணத்தில் எதுவும் சேமிக்க முடியவில்லை. தனக்கு படிக்க தெரியாததால் கணக்கு தெரியாமல் பணம் வசூலித்து நஷ்டம் ஏற்பட்டது. அப்போது கண்ணன் அம்மாவிடம் எதிர் வீட்டு மாமாவும் கடை வைத்து தானே மாடி வீடு கட்டி இருக்கிறார்கள்.
நாம் மட்டும் இதே ஓட்டு வீட்டிலே இருக்கிறோம் என்று கேட்டான். மக்கள் எனக்கு கணக்கு தெரியாது என்று ஏமாற்றுகிறார்கள். மனசு கஷ்டமாக இருக்கிறது என்று வருத்தப்பட்டார்.
அன்றே அம்மாவுக்குத் துணையாக கடையில் வியாபாரம் செய்ய வேண்டும் என்று கண்ணன் உறுதி கொண்டான். காலையில் உதவி செய்துவிட்டு கல்லூரிக்குச் சென்றான்.
கண்ணன் படித்தவன் என்பதால் எல்லோரும் சரியாக பணத்தை கொடுத்தார்கள். கொஞ்ச நாளிலேயே பணம் அதிகரிக்க இன்னொரு திட்டம் போட்டான்.
நமது கடைக்கு வருவோருக்கு ஒரு கீரைக் கட்டு இலவசம் என அறிவித்தான். கூட்டமும் கூடியது. அம்மாவும் கண்ணனோடு சேர்ந்து பணத்தை எண்ணக் கற்றுக்கொண்டாள். கண்ணன் நினைத்தபடி அழகான வீடு கட்டி மகிழ்ச்சியாக இருந்தனர்.
இதைத் தான் வள்ளுவர்,
எண்என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு - என்றார்.
கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியை