Published : 02 Nov 2022 06:19 AM
Last Updated : 02 Nov 2022 06:19 AM

ப்ரீமியம்
கையருகே கிரீடம் - 16 நறுமண நிபுணராவது எப்படி?

வித விதமான நறுமணங்களை நுகர்வது புத்துணர்ச்சியை தரும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், நுகர்ந்து பார்த்தால் சம்பளம் கிடைக்கும் என்று தெரியுமா? ஆம், உங்களுக்கு வாசனைத் திரவியங்கள் மீது தனிப்பிரியம் இருந்தால் நறுமண நிபுணர் பணியை முழுநேரமாகவே தேர்ந்தெடுக்கலாம். நறுமண நிபுணராக என்ன செய்ய வேண்டும்? அது தொடர்பான படிப்புகள் என்ன? எங்கே வேலை கிடைக்கும்? நறுமண நிபுணருக்கு நறுமணங்களை பகுத்தறியும் திறமையோடு, புதிய நறுமணங்களை உருவாக்கும் தனித்துவமும் தேவை. வாசனைத் திரவியங்களை ஒன்றோடொன்று கலந்து புதிய கலப்பு வாசனையை உருவாக்கும் நுட்பம் வேண்டும். வாசனைகள் மனிதர்களை எப்படி பாதிக்கின்றன என்கிற நுண்ணறிவு தேவை. பொருட்களை நுகர்ந்து அவைகளை தரம் பிரிக்கும் திறமை வேண்டும். கூடவே வாசனை பொருட்கள் ஏற்படுத்துகிற மாசுக்கட்டுப்பாடு, அவைகளால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்பு ஆகியவை பற்றிய புரிதலும் இது தொடர்பான சட்டங்களைப் பற்றிய தெளிவும் தேவை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x