

நாம் எல்லாரும் சின்ன வயசுல நிறைய விளையாட்டுக்கள் விளையாடி இருப்போம் அதில் முக்கியமான ஒன்று. அப்பாவோட சட்டையையும் செருப்பையும் மாட்டிகிட்டு நான் வேலைக்கு போறேன்னு கிளம்பி டாட்டா சொல்லுவோம், ஞாபகம் இருக்கா.
ஆசிரியரா தெருவில் இருக்கிற எல்லா குழந்தைகளையும் உட்கார வைத்து பாடம் நடத்தி விளையாடி இருப்போம் ஞாபகம் இருக்கா. அது குழந்தைங்க விளையாடுற விளையாட்டு மட்டும் இல்லை இந்த உலகத்தை குழந்தைங்க புரிஞ்சிக்க முயற்சி பண்ற ஒரு வழியும் கூட. சரி இப்போ வகுப்பறை விளையாட்டு.
நீங்க எல்லாரும் புத்தகத்திலிருந்து ஒரு ஆளுமையை தேர்வு செய்துகொள்ளுங்கள். அவர்களாக நீங்கள் வார்த்தைகள் எதுவும் பேசாமல் நடித்துக் காண்பிக்க வேண்டும்.
நாங்கள் அவர் யாரென்று கண்டுபிடிப்போம். நபர்கள் மட்டும் அல்ல அறிவியல் பரிசோதனைகள். சரித்திர சம்பவங்கள். மனித நாகரீக வளர்ச்சி நிகழ்ந்த காலம் என எது வேண்டுமானாலும் நடித்துக் காண்பிக்கலாம். ஆனா பேச கூடாது.. நடிப்பு மட்டும்தான். நாங்க அதை கண்டுபிடிக்கிறோம். என்ன மாணவர்களே தயாரா?
மாணவர்கள் அதை நடித்து காண்பிக்க... அனைவரும் கண்டுபிடிக்கின்றனர். இப்போது நீங்கள் வசனம் பேசி நடிக்கலாம். அதற்கு முன் இதை புரிந்து கொள்ளுங்கள். நடிப்பு நாடகம் மட்டுமல்லாமல் எந்த கலை செயல்பாடாக இருந்தாலும். அதற்கு முன் தயாரிப்பில் அது தொடர்பான அறிவியல் ஆராய்ச்சிகள் ஆதாரப்பூர்வமான தரவுகள் சேகரிக்கப்பட வேண்டும். நட்பும் அப்படித்தான்..
நீங்கள் அந்த கதாபாத்திரம் தொடர்பான ஆராய்ச்சியும் உண்மையை கண்டறிதலும் முக்கியம். உதாரணத்துக்கு அவ்வையாரை எடுத்துக் கொண்டால்.. தமிழ் இலக்கியத்தில் எத்தனை அவ்வையார்கள் இருந்தனர் அவ்வை நமது பாடத்தில் கூறியிருக்கின்ற பாடல் என்ன.. என்பது முக்கியம். வேடமிட்டுக்கொண்டு திரைப்படத்தில் வரும் பாடலை பாடினால்... அது உங்கள் சுயகற்பனையும் இல்லை.. அப்படிப்பட்ட ஒரு வகுப்பறை செயல்பாட்டால் வகுப்பறைக்கும் உங்களுக்கும் எந்த உபயோகமும் இல்லை.
கட்டுரையாளர்: நாடகக் கலை மூலம் கல்வி பயிற்றுவிப்பவர்
முந்தைய அத்தியாயம்: நடிப்பல்ல படிப்பு 4: கவிதைகளை ரசியுங்கள்