

இன்றைக்கு நாம் தமிழ் பாடத்துல ஒரு செய்யுள் பார்க்கப் போகிறோம்.. மாணவர்களில் இருவர் பேசிக்கொள்கின்றனர்... ஆசிரியர் அவர்களைப் பார்த்து.. "என்னங்க பேசுறீங்க சொல்லுங்க.."
"மிஸ் இவன் சொல்றான் இப்போ தமிழ்ல ரசிச்சு ரசிச்சு நடத்துவாங்க நாமெல்லாரும் கேட்டுகிட்டே தூங்கலாம்னு.." அதுதான் இல்லை. இன்றைக்கு நான் உங்களை நாலு குழுவாக பிரிக்கப் போறேன்.
ஒவ்வொரு குழுவுக்கும் ஒவ்வொரு பத்தி கொடுக்கப் போகிறேன். நீங்க அதை படிச்சுட்டு ஒரு மவுனமான காட்சியாக நடிச்சு காட்ட வேண்டும். மற்றவர்கள் அதைப்பார்த்து இது எந்த செய்யுள் என்று கண்டுபிடிப்பார்கள். அதுக்கப்புறம் நீங்க அதே காட்சியை உங்க ளுடைய பத்திய படிச்சுக்கிட்டே நடிச்சு காட்ட வேண்டும்.
ஆசிரியர் ஒவ்வொரு குழுவாக சென்று மாணவர்கள் எவ்வாறு காட்சிப்படுத்த முயற்சிக் கிறார்கள் என்பதை கேட்டு உதவுகிறார்.. ஒவ்வொரு காட்சி நிலைகளும் மிகச்சரியாக செய்யுளை வெளிப்படுத்துகிறது என்பதை கவனித்து மாணவர்கள் அந்த காட்சி நிலையை கொண்டு வர உதவி செய்கிறார். பிறகு ஒவ் வொரு குழுவையும் அமரவைத்து அவர்களை மற்ற குழுவினரை கவனிக்கும்படி கூறி, எந்த செய்யுள் என்பதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.. அனைவருடைய காட்சியும் பார்த்த பிறகு அதைப் பற்றி பேசுவோம்.
குழந்தைகளே, கவிஞர்களும் கலைஞர்களும் நாம் வாழ்கின்ற இதே உலகத்தில் தான் வாழ்கின்றனர். ஆனால் இந்த உலகத்தை அவர்கள் தொடங்கி முடிக்கின்ற வரிகளும் அதற்கு அவர்கள் வழங்குகின்ற அர்த்தமும் நம் வாழ்வோடு கலையை ஒன்றச்செய்கிறது. உங்களுக்குள்ளும் பல கவிஞர்களும் இருப்பீர்கள் அவர்களை ஊக்குவிப்பதற்காக கவிதைகள் என்பது வெறும் வார்த்தைகள்..
அல்ல. அது வார்த்தைகளைத் தாண்டிய ஒரு உணர்வின் கடத்தல்.. ஒரு மனபிம்பத்தின் உருவாக்கம்.. நல்ல ரசனையான கவிதைகளை நீங்கள் தேர்ந்தெடுத்து ரசிக்கத் தொடங்கி விட்டீர்கள் என்றால்.. உங்கள் வாழ்க்கை ரசனைமிக்கதாக நுண்ணறிவு மிக்கதாக மாறிவிடும். சரியாக இப்போது நான் பாடம் நடத்தப் போவதில்லை.. நீங்கள் நடிக்கப் போகிறீர்கள்.. பார்க்கலாமா..
கட்டுரையாளர்: நாடகக் கலை மூலம் கல்வி பயிற்றுவிப்பவர்