உலகை மாற்றும் குழந்தைகள் 5: சதுரங்க உடன்பிறப்புகள்

உலகை மாற்றும் குழந்தைகள் 5: சதுரங்க உடன்பிறப்புகள்
Updated on
2 min read

“என்ன! அப்பாவும் மகனும் அமைதியாக இருக்கிறீர்கள்?” கேட்டுக்கொண்டே, தான்வாசித்துக் கொண்டிருந்த புத்தகத் துடன் வந்தார் அம்மா. “மகன் திறன்பேசியில் (Smartphone) விளையாடி னாலே சாருக்கு அவ்ளோ கோபம்வருமே! இப்போது அவன் விளையாடுவதையே பார்த்துக் கொண்டிருக் கிறீர்கள்?” என்று கேட்டார்.

எட்டிதிறன்பேசியைப் பார்த்தார். மகன்சதுரங்கம் விளையாடிக் கொண்டிருந் தான். “அட! இந்த மாற்றம் எப்போதிருந்து?” என்று அம்மா கேட்டதும், “நேற்று கார்க்கி வீட்டுக்குப் போனேன்னா! அவன், விளையாடு வதைப் பார்த்தேன்.

அதான்” என்றான்.அப்பாவும் மகனும் அமைதியா இருந்தா சரிதான்” என்று சொல்லிவிட்டு திரும்பினார். “வைசாலி மற்றும் பிரக்யாநந்தா பற்றியும் கார்க்கி சொன்னான் மா” என்று சொல்லி, தான்கேட்டதை பெற்றோருடன் பகிர்ந்தான்.

வைசாலி

2001-ம் ஆண்டு சென்னையில் பிறந்தாள் வைசாலி. தொலைக்காட்சி யில் அதிக நேரம் செலவிடும் மகளை நினைத்து பெற்றோர் கவலையுற்றார்கள். கவனத்தை திசை திருப்புவதற்காக, 6 வயதில் சதுரங்கம் மற்றும் ஓவிய வகுப்பில் வைசாலியை சேர்த்தார்கள்.

சதுரங்கம் விளையாட்டு வைசாலிக்கு மிகவும் பிடித்துவிட்டது. உள்ளூர் சதுரங்க போட்டி தொடரில் வைசாலி பங்கேற்றாள். ‘குறைந்த வயதில் பங்கேற்றவர்’ என்று பரிசுகொடுத்தார்கள்.

<strong>வைசாலி</strong>
வைசாலி

வைசாலி உற்சாக மானாள். போலியோ பாதிப்புடன், வங்கியில் பணியாற்றும் அப்பாவால், மகளை பல இடங்களுக்கு அழைத்துச் செல்ல இயலவில்லை. அம்மாதான் அழைத்துச் சென்றார். 12 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக இளையோர் சதுரங்க சாம்பியன்ஷிப் பட்டத்தை 2012-ல் வைசாலி வென்றாள்.

2013ல், சென்னையில் சர்வதேசசதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இப்போட்டியில், இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாத் ஆனந்தை வென்று பட்டம் சூடினார் மேக்னஸ் கார்ல்சென். ஆனால், போட்டி தொடங்குவதற்கு முன்பாக, சதுரங்கத்தை பிரபலப்படுத்த, வளர்ந்து வரும் 20 வீரர்களுடன் விளையாடிய கார்ல்செனை வைசாலி வென்றிருந்தாள். தற்போது, ‘சர்வதேச மாஸ்டர்’ பட்டத்துடன், பெண்கள் சதுரங்கத்தில் இந்திய அளவில் மூன்றாவது இடத்தில் இருக்கிறாள் வைசாலி.

பிரக்யாநந்தா

வைசாலிக்கு 2005-ல் தம்பி பிறந்தான். அவன் பெயர் பிரக்யாநந்தா. வைசாலிக்கு கொடுக்கும் தொல்லை தாங்காமல், அவனுக்கும் சதுரங்க அட்டையை பெற்றோர் வாங்கிக் கொடுத்தனர். சதுரங்கம் அவனுக்கும் பிடித்த விளையாட்டானது. பயிற்சி எடுத்தான். 6 வயதானபோது, 7 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்தியசதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தான்.

அதேவேளையில், 8 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக இளையோர் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் 2013-ல் வென்றான். மேலும், 10 மற்றும் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக இளையோர் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் முறையே 2015 மற்றும் 2018ம் ஆண்டுகளில் சாம்பியன் ஆனான்.

<strong>பிரக்யாநந்தா</strong>
பிரக்யாநந்தா

தொடர்ந்து வெற்றி பெற்று, 12 வயது, 10 மாதம் 13 நாட்களில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றான்(2018). அப்போது, மிக இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றஇரண்டாவது நபர் என்னும் பெருமைக்குரியவன் ஆனான்.

கரோனா ஊரடங்கினால் இரண்டு ஆண்டுகளாக போட்டிகள் நடைபெறாத சூழலில், 5 முறை உலக பட்டம் பெற்ற, தர வரிசையில் முதலிடத்தில் உள்ள கார்ல்செனை மே 21, 2022ல் இணைய வழியில் நடந்த போட்டியில் வென்று சாதித்தான்.

கட்டுரையாளர்: எழுத்தாளர்,

மொழி பெயர்ப்பாளர்.

தொடர்புக்கு: sumajeyaseelan@gmail.com

முந்தைய அத்தியாயம்: உலகை மாற்றும் குழந்தைகள் 4: செருப்பு இல்லாத கால்கள்!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in