டிங்குவிடம் கேளுங்கள் - 56: துணியை எரித்தால் ஏன் திரவமாவதில்லை?

டிங்குவிடம் கேளுங்கள் - 56: துணியை எரித்தால் ஏன் திரவமாவதில்லை?
Updated on
1 min read

திண்மப் பொருட்களை வெப்பப்படுத்தி னால் திரவமாக மாறும் என்று படித்தேன். ஆனால் விறகு, துணி போன்ற திண்மப் பொருட்களை எரித்தால், வாயுவாக மாறிவிடுகிறதே ஏன், டிங்கு? - வி.கே. ஷுகதர், 3-ம் வகுப்பு, கம்மவார் ஆரம்பப் பள்ளி, அருப்புக்கோட்டை.

பொருட்கள் திண்மம், திரவம், வாயு, பிளாஸ்மா என நான்கு நிலைகளைக் கொண்டுள்ளன. திண்மப் பொருட்கள் உருகி திரவமாக மாறும். திரவப் பொருட்கள் உறைந்து மீண்டும் திண்மமாக மாறும். திண்மப் பொருட்களின் மூலக்கூறுகள் ஒன்றாகப் பிணைந்திருக்கும்.

இந்த பொருட்களைக் கடுமையான அழுத்தத்துக்கு உட்படுத்தினாலும் தன் நிலையிலிருந்து மாறாது. பாறைகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அதே போலதிண்மப் பொருட்களிலிருந்து திரவமாக மாறாமல் வாயுவாக மாறக்கூடிய பொருட்களும் இருக்கின்றன. கற்பூரம், விறகு, துணி போன்றவை அப்படிப்பட்ட திண்மப் பொருட்கள்தாம், ஷுகதர்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in