

முதல் மின்னணுவியல் கணினியான ENIAC 1954-ல் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து இன்று வரை தானியங்கி கணினியின் வளர்ச்சி தொடர்ந்து கொண்டிருக்கிறது என்று கடந்த வாரம் பார்த்தோம்.
அதன் அளவு 1500 சதுர அடி (50 X 30). அதன் இன்றைய மதிப்பு ரூ.50 கோடி. ஆனால், இன்று நீங்கள் உங்கள் கையில் வைத்திருக்கும் ஸ்மார்ட்போனுடன் ஒப்பிடும்போது பல லட்சம் மடங்கு மெதுவாக கூட்டல் செய்யக்கூடியது.
இந்த அசாத்திய வளர்ச்சி எவ்வாறு சாத்தியமானது என்பதை புரிந்துகொள்ள முதலில் இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சி அத்தனைக்கும் பின்னால் கணினி உள்ளது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
அதற்கு முதல்படி நாம் முன்பே பார்த்ததுபோல் உங்களால் இரண்டு எண்களை கூட்ட முடிந்தால், அதை எழுதி அடுத்தவரிடம் கொடுத்து, அவராலும் உங்கள் செயல்முறையை பின்பற்ற முடிந்தால், நீங்கள் நவீன தொழில்நுட்பத்தை அறிந்துகொள்ள தயார் என்பது பொருள்.
இப்போது 789 மற்றும் 693 ஆகிய இரண்டு எண்களை எவ்வாறு கூட்டுவது என்பதை ஒரு பொதுவான செயல்முறை மூலம் செய்துபார்ப்போம். ஒவ்வொரு எண்ணில் உள்ள ஒவ்வொரு இலக்கங்களுக்கும் ஒரு பெயர் கொடுப்போம். N1D1 என்றால் எண் (Number) 1, இலக்கம் (Digit) 1 என்று பொருள்.
789 --> N1D3 N1D2 N1D1
693 --> N2D3 N2D2 N2D1
அடுத்து, செயல்முறையை விரிவாக எழுதுவோம்.
STEP 1: N1D1 N2D1-->N3D1
STEP 2: N3D1 10-ஐ விட அதிகம் என்றால்
N3D1 --> 10 --> N3D1
1 --> Carry
10-ஐ விட குறைவு என்றால்
0 --> Carry
STEP 3: N1D2 N2D2 Carry --> N3D2
N3D2 10- ஐ விட அதிகமாக இருந்தால்
N3D2 - 10 --> N3D2
1 --> Carry
10- ஐ விட குறைவாக இருந்தால்
0 --> Carry
STEP 4: N1D3 N2D3 Carry --> N3D3
N3D3 10- ஐ விட அதிகமாக இருந்தால்
N3D3 - 10 --> N3D3
1 --> Carry
10- --> ஐ விட குறைவாக இருந்தால்
0 --> Carry
STEP 5: Carry ‘0' ஆக இருந்தால் விடை N3D3, N3D3, N3D1
Carry ‘1' ஆக இருந்தால் விடைcarry N3D3, N3D2, N3D1.
இந்த ஐந்து STEP - களையும் புரிந்துகொண்டால் நவீன தொழில்நுட்பத்தை கற்பது எளிது.
N3D3 - 10 --> N3D3 என்றால் N3D3-லிருந்து 10-ஐ கழித்து விடையை N3D3-ல் எழுதவும் என்று பொருள். ‘0' --> Carry என்றால் Carry-ல் ‘0' ஐ எழுதவும் என்று பொருள்.
கணிதத்தில் எப்பொழுதும் ஒரு குழப்பம் உண்டு. எப்பொழுது எண்களுடன் எழுத்துக்கள் சேருகிறதோ அப்பொழுதே குழப்பம் ஏற்பட ஆரம்பிக்கிறது. ஆனால், இதைப் புரிந்துகொள்வது முக்கியம். இந்த வாரக் கட்டுரையை பலமுறை புரியும்வரை படியுங்கள்.
சென்ற வாரக் கட்டுரையுடன் இணைத்து படியுங்கள். நமக்கு நன்றாகத் தெரிந்த ஒரு செயலை (கூட்டலை) அடுத்தவருக்கு புரியும்படி எழுதும் முறை இது. புரியவில்லை என்று கடந்து செல்லாதீர்கள். ஒரே ஒரு முறை புரிந்துகொண்டால் நவீன தொழில்நுட்பத்தில் நிபுணராவது சுலபம்.
தொடர்ந்து டிஜிட்டல் மொழி பேசுவோம்…
கட்டுரையாளர், பொறியாளர், தொழில்நுட்பப் பயிற்றுநர்