

தமிழ்நாடு அறிவியல் இயக்க ராமநாதபுரம் மாவட்ட கிளை சார்பில் 30-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு தொடர்பான வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி வகுப்புகள் ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் அய்யாச்சாமி தலைமை வகித்தார். தேசிய குழந்தைகள் அறிவியல்மாநாட்டின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சதக் அப்துல்லா வரவேற்றார்.
சுவார்ட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் சுகந்தி செல்வராஜ், சிஎஸ்ஐ கல்வியியல் கல்லூரி முதல்வர் ஆனந்த் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அறிமுக உரையாற்றினார்.
கடந்த ஆண்டு நடந்த மாநில அளவிலான அறிவியல் மாநாட்டில் பரிசு பெற்ற பரமக்குடி அருகே கமுதக்குடி பள்ளி மாணவர் எஸ்.சேதுரத்தினத்துக்கு பரிசு வழங்கப்பட்டது.