தென்மண்டல சிலம்பம் போட்டியில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பள்ளி சாதனை

தென்மண்டல சிலம்பப் போட்டியில் 31 பதக்கங்கள் வென்ற மதுரை  மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுடன் ஆசிரியர்கள்.
தென்மண்டல சிலம்பப் போட்டியில் 31 பதக்கங்கள் வென்ற மதுரை  மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுடன் ஆசிரியர்கள்.
Updated on
1 min read

தென்மண்டல சிலம்பம் போட்டியில் மதுரை  மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி 4 தங் கம் உள்பட 31 பதக்கங்கள் வென்று சாதனை படைத்தது.

தென்மண்டல அளவிலான சிலம்பம் போட்டி திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியில் மதுரை  மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 31 பேர் பங்கேற்றனர். அவர்களில் 4 பேர் தங்கப் பதக்கமும், 9 பேர் வெள்ளிப் பதக்கமும், 18 பேர் வெண்கல பதக் கமும் வென்றனர்.

பதக்கம் வென்ற மாணவிகளை பள்ளிக்குழு தலைவரும், இந்துசமய அறநிலையத் துறை மண்டல இணை ஆணையருமான கே.செல்லத்துரை, பள்ளியின் செயலரும், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் துணை ஆணையருமான ஏ.அருணாச்சலம், தலைமை ஆசிரியை பி.இந்துமதி, உடற்கல்வி இயக்குநர் எஸ்.வசந்தி, உடற்கல்வி ஆசிரியை ஏ.உமா, சிலம்பம் பயிற்சியாளர் ஜி.மாரிமுத்து ஆகியோர் பாராட்டினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in