

புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் பள்ளி மாணவர்களின் 97 அறிவியல் படைப்புகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.
புதுக்கோட்டை பேராங்குளம் அரசு உதவி பெறும் திரு இருதய மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தொடங்கிவைத்தார். விழாவில் அவர் பேசியது:
புதிய தொழில்நுட்பம்
பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளிடையே அறிவியல் ஆர்வத்தை ஊக்குவித்து திறன்களை வெளிக்கொண்டுவரவும், தலைமைப் பண்பு, குழு மனப்பான்மை, அறிவியல் சார்ந்த ஆரோக்கியமான கலந்துரையாடல் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மாணவ பருவத்திலேயே புதிய தொழில்நுட்பத்தை ஆராய்ந்து கையாள தெரிந்து கொள்ளவும் அறிவியல் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
கணிதம், நகரும் பொருட்கள், உணவு, புதிய கண்டுபிடிப்பு முயற்சிகள் உள்ளிட்ட 8 தலைப்புகளில் புதுக்கோட்டை, அறந்தாங்கி, இலுப்பூர் ஆகிய 3 கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த 28 பள்ளிகளின் 84 படைப்புகள், 13 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளை சேர்ந்த 13 படைப்புகள்என மொத்தம் 97 அறிவியல் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு தலைப்புகளில் இருந்தும் முதல் 3 பேர் தேர்வு செய்யப்பட்டு காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
அறிவுத்திறனை மேம்படுத்துங்கள்
பள்ளிகளில் பயிலும் மாணவர் கள் இதுபோன்ற அறிவியல் கண்காட்சிகளில் கலந்து கொண்டு தங்களது புதிய அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தி அறிவுத்திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு ஆட்சியர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் டி.விஜயலெட்சுமி, மாவட்டக் கல்வி அலுவலர்கள் எஸ்.ராகவன், எஸ்.ராஜேந்
திரன், கு.திராவிடச்செல்வம் உள்ளிட் டோர் கலந்துகொண்டனர்.