2-வது சுற்றில் பாருபள்ளி காஷ்யப்

2-வது சுற்றில் பாருபள்ளி காஷ்யப்
Updated on
1 min read

தைபே: தைபே ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பாருபள்ளி காஷ்யப் 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

சீன தைபேவில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பாருபள்ளி காஷ்யப், சீன தைபேவின் ஷி யு ஜென்னை எதிர்த்து விளையாடினார்.

இதில் காஷ்யப் 24-22, 21-10 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீரரான மிதுன் மஞ்சுநாத் 21-17, 21-15 என்ற நேர் செட்டில் டென்மார்க்கின் கிம் புரூனை தோற்கடித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in