அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கை இருமடங்கு உயர்வு 

அலிகர் முஸ்லிம் பல்கலை
அலிகர் முஸ்லிம் பல்கலை
Updated on
1 min read

உபியின் அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் வெளிநாடுகளில் இருந்து மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. சுமார் 350 என்றிருந்தவர்கள் இருமடங்காக உயர்ந்து தற்போது 715 உள்ளனர்.

இது, நாட்டின் பழம்பெரும் மத்திய பல்கலைகழகமாக உள்ளது. சுமார் 150 வருடங்களுக்கு முன் சர் சையது அகமது கான் என்பவரால் தொடங்கப்பட்டது.

அப்போது முதலாகவே இப்பல்கலைக் கழகத்தில் வெளிநாடுகளில் இருந்து மாணவர்கள் வந்து தங்கி கல்வி பயில்வது வழக்கமாக உள்ளது. இதனால், உலகின் முஸ்லிம் நாடுகள் உள்ளிட்டவைகளில் அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் கல்விக்கு தனிமதிப்பு உருவாகி உள்ளது.

சுமார் 37,000 மாணவர்கள் கொண்ட இப்பல்கலைக் கழகத்தில் 1700 பேராசிரியர்கள் மற்றும் 3,600 அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு வெளிநாட்டவர்களில் இளங்கலை 431, முதுநிலை 125 மற்றும் 129 மாணவர்கள் உயர்நிலை ஆய்வுக்கல்வியும் பயின்று வருகின்றனர்.

இவற்றில் மிக அதிகமாக ஏமன் நாட்டில் இருந்து 151 மாணவர்கள் உள்ளனர். இதற்கு அடுத்ததாக 117 தாய்லாந்து மாணவர்களும், மூன்றாவது எண்ணிக்கையில் இந்தோனேசியாவில் இருந்து 66 பேரும் பயில்கின்றனர்.

இதேபோல், மொரீஷியஸ் 8, எகிப்து 7, சூடான் மற்றும் கனடாவின் தலா 3 மாணவர்களும் அலிகர் பல்கலைக் கழகத்தில் கல்வி பெறுகின்றனர். சோமாலியா, நைஜீரியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் தலா 2 மற்றும் லிபியாவின் 2 பேரும் மாணவர்களாக உள்ளனர்.

இவர்களில், ஆப்கானிஸ்தான் 60, ஜோர்டான் 49, துர்க்மேனிஸ்தான் 21, நேபால் 20, iஇரான் 15 மற்றும் பாலஸ்தீன் 13 பேரும் அலிகரின் மாணவர்களாக உள்ளனர். பாகிஸ்தானில் இருந்து இங்கு ஒரே ஒரு மாணவர்கள் கல்வி பயில்கிறார்.

இவர்கள் அன்றி வெளிநாடுகளில் வாழும் இந்திய மாணவர்கள் 171 பேரும் இங்கு கல்வி பயில்கின்றனர். இவர்களில் 65 பேர் மாணவிகள் ஆவர்.

முற்றிலும் குறைந்த தமிழக மாணவர்கள்

இவர்களுடன் ஒரு காலத்தில் தமிழகத்தில் இருந்தும் சுமார் 1800 மானவர்கள் வந்து தங்கி கல்வி பயின்று வந்தனர். நாட்டில் தனியார் கல்வி நிலையங்களுக்கான அனுமதி 1985 ஆம் ஆண்டுகளில் கிடைத்த பின் தமிழக மாணவர்கள் எண்ணிக்கை முற்றிலும் குறைந்து விட்டன.

தற்போது முதுநிலை மற்றும் உயர்கல்வி ஆய்வில் மட்டும் ஓரிருவர் தமிழர்களாக உள்ளனர். இப்பல்கலைக் கழகத்தின் கல்விக்கட்டணம், தனியார் கல்விநிலையங்கள் போல் அன்றி சில ஆயிரங்கள் மட்டும் என்பது நினைவுகூரத்தக்கது.-06-12-2019

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in