மதிப்பெண்களை விட நிபுணத்துவம் பெற்றவர்களை உருவாக்குங்கள்: மோகன் பாகவத் வேண்டுகோள்

மதிப்பெண்களை விட நிபுணத்துவம் பெற்றவர்களை உருவாக்குங்கள்: மோகன் பாகவத் வேண்டுகோள்
Updated on
1 min read

மதிப்பெண்களை விட நிபுணத்துவம் பெற்ற மாணவர்களை உருவாக்குங்கள் என்று கல்வியாளர்களிடம் மோகன் பாகவத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

'சர்வதேச கல்வி முதல்வர்கள் மாநாடு 2019' நாக்பூரில் இன்று நடைபெற்றது. இதில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கலந்துகொண்டு பேசினார். கல்வியாளர்கள் மத்தியில் அவர் கூறும்போது, ''வகுப்பறைக் கல்விக்கு என, தனி முக்கியத்துவம் இருந்தாலும் அது மட்டுமே அனைத்துமானதாக இருக்காது.

எனினும் வகுப்பறை என்பது நிகழ் நேர அனுபவமாக இருக்கும். அதை எப்படி முன்னெடுத்துச் செல்கிறோம் என்பதே அடுத்தகட்டத்துக்குச் செல்வதற்கான வாய்ப்பை அளிக்கும்.

இன்றைய காலகட்டத்தில் போட்டி காரணமாக மதிப்பெண்களும் மதிப்பெண் சான்றிதழ்களும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக மாறிவிட்டன. இதைச் செய்வது கல்வி அல்ல. நாம் நிபுணத்துவம் பெற்ற மாணவர்களைக் கல்வியின் வழியாக உருவாக்க வேண்டும்'' என்று மோகன் பாகவத் தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in