

சென்னை
மகாத்மா காந்திஜியின் 150 - ஆவது பிறந்தநாளை யொட்டி, மத்திய அரசின் காந்தி ஸ்மிருதி மற்றும் தர்ஷன் சமிதி அமைப்பு, காந்தியின் ஆக்கப்பூர்வ பணிகள் பற்றிய கருத்துக்கள் குறித்து கட்டுரைப் போட்டியை நடத்த உள்ளது.
"உள்ளேயே சுற்றுச் சூழலை சீர்படுத்துங்கள்’ என்ற தலைப்பில் ஒரு பத்தி அளவில் கட்டுரை எழுத வேண்டும். போட்டியில் வெற்றி பெறுவோருக்கு ரொக்க பரிசு வழங்கப்படும் இதற்கான விண்ணப்பங்கள் அக்டோபர் 14-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
விண்ணப்ப முறை, போட்டிக்கான விதிமுறைகள் தொடர்பான கூடுதல் விவரங்களை http://www.mygov.in/task/paragraph-writing-contest என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.