புதிய கல்வி நூல்கள் 2026

புதிய கல்வி நூல்கள் 2026
Updated on
1 min read

பேசப்படாதவை: கன்னியகுமரி மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் பிறந்து வளர்ந்து, அருகில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து, ஏதாவது பட்டப்படிப்பு முடித்து கடைசியில் உணவகங்களிலும், கடைகளிலும் கூலிகளாக அவதிப்படுபவர்களைப் பற்றிப் பேசுகிறது, இந்த நூலின் ஓர் அத்தியாயம். இதுபோன்று குழந்தைகள் தொடர்பாகப் பேசப்படாமல் இருக்கும் பல கருத்துக்களை அலசும் நூல் இது.

‘குழந்தைகளுக்காய்...’

அருட்பணி. குருசு கார்மல் சி.ஏ., என்சிபிஎச்,

தொடர்புக்கு: 044 2625 1968

இளையோரின் நியாயம்: சமூகப் பொறுப்பற்றவர்கள் என ‘ஜென் இசட்’, ‘ஜென் ஆல்பா’ தலைமுறையினரை எந்நேரமும் பெரியவர்கள் நிந்திக் கின்றனர். ஆனால், இந்தப் பருவத்தினரின் நடத்தைக்கு முதன்மையான பொறுப்பேற்க வேண்டியது பெரியவர்கள்தாம் என்பதை மறந்து விடுகின்றனர்.

வண்ணமயமாகக் காட்சியளிக்கும் குழந்தைகளின் உலகம் சிக்கலானதும்கூட. அதைப் பெரியவர்களின் இடத்திலிருந்து அதிகாரத்துடன் அணுகாமல், குழந்தைகளுக்கு அருகில் உட்கார்ந்தபடி அணுகச் சொல்கிறது ‘கசடற: குழந்தைகள்- ஒழுக்கங்கள்-கற்பிதங்கள்’.

‘கசடற: குழந்தைகள்- ஒழுக்கங்கள்-கற்பிதங்கள்’

இனியன், Dravidian Stock Publishers,

தொடர்புக்கு: 9092787854

ருசிகர கல்வி: தன்னை சுற்றி இருக்கும் அத்தனை பொருள்களையும் நாவால் சுவைத்தே சின்னஞ்சிறு குழந்தை அறிய முற்படுகிறது. ஓரளவு வளர்ந்த பிறகும் பெருவாரியான சிறாருக்கு உணவே மிகப் பிடித்தமானது. இந்தப் பருவத்தினருக்கு ஏட்டுக் கல்வியையும் ருசிகரமாகக் கொடுக்கும் முயற்சிதான் இந்த நூல்.

‘ஜிகர்தண்டா பள்ளிகள்’

கலகலவகுப்பறை சிவா, புகஸ் ஃபார் சிலரன்

தொடர்புக்கு: 04424332924

பயணப் பாடம்: வகுப்பறை சொல்லித் தராத வாழ்க்கைப் பாடத்தைப் பயணங்கள் கற்பிக்கும். ஐஏஎஸ் அதிகாரியான ஆனந்தகுமார் பணி நிமித்தமாக மேற்கு வங்கத்தில் ஒரு மாதம் தங்க நேர்ந்தது.

அப்போது அவர் மேற்கொண்ட பயணங்களின் ஊடாக தரிசித்த அபூர்வக் காட்சிகளை, கண்ட உண்மைகளைப் பயணக் கட்டுரை பாணியில் எழுதும்போதே தான் வாசித்த நூல்களை, படித்தறிந்த அறிஞர்களையும் அழகுற அறிமுகம் செய்யும் நூல் ‘நியூட்டன் சொல்லாத விதி’.

‘நியூட்டன் சொல்லாத விதி’

டாக்டர் இரா. ஆனந்தகுமார் இ.ஆ.ப.,

இந்தியன் யூனிவர்சிட்டி பிரஸ், தொடர்புக்கு: 9444567935

நன்னெறி கல்வி: மாணவர்களுக்கு அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்தவற்றைக் கற்பிப்பதோடு நில்லாமல் பேராசையைத் தவிர்த்து, தேவையானவற்றோடு மகிழ்ச்சியுடன் வாழும் கலையைக் கற்றுத் தர வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது, இந்த நூல்.

‘வாழ்வோம் வளத்துடன்’

முகிலை இராசபாண்டியன், Pen Bird Publications.

தொடர்புக்கு: 8220063246.

புதிய கல்வி நூல்கள் 2026
தேர்வுகளை ஊதித் தள்ளலாம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in