கொஞ்சம் technique கொஞ்சம் English - 137: Conjunction - Otherwise. அனாவசிய செலவு

கொஞ்சம் technique கொஞ்சம் English - 137: Conjunction - Otherwise. அனாவசிய செலவு
Updated on
1 min read

மித்ரன்: நல்லவேளை நேற்று அப்பாவிடம் சீக்கிரமாக சொல்லிவிட்டோம். இல்லையெனில் அப்பா உனக்காக அட்லஸ் வாங்கிட்டு வந்திருப்பார்.

இனியன்: நீயும் சரியான நேரத்தில் எனது அட்லஸை கொண்டு வந்தாய், இல்லையெனில் பண விரயம் ஆகியிருக்கும்.

மித்ரன்: அட்லஸ் வேண்டாம் என்று திருப்பி கொடுக்க முடியாதா என்ன?

பாட்டி: சிறிய கடைகளில் வாங்கிய பொருட்களை திருப்பி கொடுத்து, வேறு பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும். Supermarket போன்ற இடங்களில் அது சாத்தியம் இல்லை.

இனியன்: Supermarket-ல் அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் இருக்கும். அப்படின்னா வாங்குறது easyதானே.

உமையாள்: அங்கே தான் அவர்களின் சாமர்த்தியம் இருக்கிறது. நமக்கு தேவையான பொருட்களை விட, ஆசைப்பட்ட பொருட்களை நிறைய வாங்கிவிடுகிறோம்.

பாட்டி: இனிமேல் நாம் என்ன வாங்க வேண்டும் என்று எழுதிக் கொண்டு போக வேண்டும். வாங்க வேண்டியதை மட்டும் வாங்கிவிட்டு வந்து விடலாம்.

இசை: இல்லையெனில் நாம் செய்ததை மறந்து Supermarket-ஐ மட்டுமே குறை சொல்லிக் கொண்டே இருப்போம்.

இனியன்: கிகிகிகி. நல்ல யோசனை பாட்டி.

பாட்டி: இப்படி நடக்க வேண்டும், இல்லையெனில் அப்படி ஆகிவிடும் என்று சொல்வதற்கு எந்த conjunction-ஐ பயன்படுத்த வேண்டும் தெரியுமா?

உமையாள்: Otherwise பாட்டி.

பாட்டி: Very good.

(தொடரும்)

கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in