

மித்ரன்: நேத்து எனக்கு நல்ல கால் வலி, அதேசமயம் அம்மாவுக்கும் பல் வலி.
உமையாள்: அச்சச்சோ, அப்புறம் என்ன ஆச்சு.
மித்ரன்: அப்புறம், அப்பா தான் dinner செஞ்சு குடுத்தாங்க.
இசை: Very nice.
மித்ரன்: அம்மா இட்லி வேண்டும் னு கேட்டாங்க. அதேசமயம் எனக்கு தோசை வேணும்னு கேட்டேன்.
இனியன்: கிகிகி
மித்ரன்: அம்மா தக்காளி சட்னி கேட்டாங்க, அதேசமயம் நான் தேங்காய் சட்னி கேட்டேன்,
இசை: ஒரே நேரத்துல வேற வேற dishes கேட்டால், செய்யுறவங்களுக்கு சிரமமா தானே இருக்கும்.
மித்ரன்: நீங்க சொல்லுறது சரி தான். அதனால், அப்பா இட்லி மட்டும் தான் செஞ்சாங்க.
பாட்டி: இப்போது contrast ஆக பேசிட்டு இருந்தீங்களே. இதற்கு எந்த conjunction ஐ பயன்படுத்த வேண்டும் தெரியுமா?
உமையாள்: நீங்களே சொல்லுங்க பாட்டி.
பாட்டி: இரண்டு கருத்துக்களுக்கு இடையே உள்ள மாறுபாட்டைக் (Contrast ideas) குறிப்பதற்கு whereas என்கிற conjunction ஐ நாம் பயன்படுத்த வேண்டும்.
இனியன்: அப்படியா.
பாட்டி: ஆமாம். மேலும், Whereas conjunction ஐ வாக்கியத்தில் பயன்படுத்தும் போது, கமாவை whereas ற்கு முன்னால் சேர்க்க வேண்டும்.
(தொடரும்)
கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்