கொஞ்சம் technique கொஞ்சம் English - 120: Conjunction - Since. புத்தக கண்காட்சிக்கு போகலாமா?

கொஞ்சம் technique கொஞ்சம் English - 120: Conjunction - Since. புத்தக கண்காட்சிக்கு போகலாமா?
Updated on
2 min read

மித்ரன்: சென்னை புத்தக கண்காட்சிக்கு போய்ட்டு வந்துட்டேன்.

இனியன்: என்னடா, ரொம்ப குறைவான, புத்தகமே வாங்கிட்டு வந்திருக்கிற?

மித்ரன்: நிறைய கூட்டமாக இருந்ததுனால, எங்கே என்ன புத்தகம் இருக்குதுன்னு தெரிஞ்சுக்க முடியல.

இசை: Science experiment book வாங்க போகிறேன் ன்னு சொல்லிட்டு இருந்தேயே. அதையாவது வாங்கியாச்சா?

மித்ரன்: இல்லை அக்கா. Train க்கு நேரமானதுனால, கிளம்பி வந்துட்டோம்.

உமையாள்: உனக்கு science books பிடிக்கும் என்பதால் முதலில் நீ science section க்கு சென்றிருக்க வேண்டும்.

மித்ரன்: ஆமாம். எனக்கும் வருத்தமா தான் இருக்குது.

பாட்டி: பரவாயில்லை மித்ரன். இவ்வளவு பெரிய அரங்கை (hall) வேடிக்கை பார்ப்பதே பெரிய அனுபவம் தான்.

மித்ரன்: ஆமாம் பாட்டி. அது உண்மை தான்.

பாட்டி: Since ஐ எப்படி preposition ஆக, adverb ஆக பயன்படுத்தினோமோ, அதே போல conjunction ஆகவும் பயன்படுத்த முடியும். தெரியுமா?

இனியன்: அப்படியா?

பாட்டி: ஆமாம். காரணங்கள் (reason) சொல்லக் கூடிய வேளைகளில், since ஆனது conjunction ஆக வரும்.

உமையாள்: Scince book ஏன் வாங்கவில்லை என்று கேட்டதற்கு நிறைய காரணங்கள் இப்போது நீ சொன்னாய் அல்லவா. அங்கே எல்லாம் since பயன்படுத்தலாம் ன்னு பாட்டி சொல்லுறாங்க.

மித்ரன்: Ok.

(தொடரும்)

கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in