கொஞ்சம் technique கொஞ்சம் English - 113: Conjunction – After. எல்லோருக்கும் கல்வி

கொஞ்சம் technique கொஞ்சம் English - 113: Conjunction – After. எல்லோருக்கும் கல்வி
Updated on
1 min read

உமையாள்: இப்படியெல்லாம் கூட செய்வாங்களா, என்ன மனுசங்க அவங்க!

இசை: சேற்றையும், சாக்கடையையும் அவங்க மேல எறிஞ்சிருக்காங்க. பெண்கள் படிக்கிறேதே தப்புன்னு சொல்லிட்டு இருந்த era அது.

உமையாள்: நம்மை படிக்க சொல்லி இப்போ எவ்வளவு encouragement கொடுக்குறாங்க. அந்த அம்மா, யாருக்கும் தெரியாம, எல்லாரும் தூங்கின பிறகு படிச்சிருக்காங்க.

இசை: பிறகு, தான் படிச்ச படிப்பு எல்லோருக்கும் benifit-ஆகணும்னு ஆசிரியரா இருந்து பாடம் சொல்லி கொடுத்திருக்காங்க.

உமையாள்: அங்கேயும் அவங்களுக்கு பெரிய challenges இருந்திருக்குது.

இசை: பள்ளிக்கு போகிற வழியில் அவங்க மேல சேற்றை வீசி அடிச்ச பிறகும், அவங்க பள்ளிக்கு தொடர்ந்து போயிருக்காங்க.

உமையாள்: பையில், தினமும் மாற்று சேலையை கையிலே வச்சிருப்பாங்களாம். பள்ளிக்குபோன பிறகு, மாற்று சேலையை உடுத்திகிட்டு, பாடம் சொல்லிக் கொடுத்து இருக்காங்க.

இசை: அவங்கள மாதிரி நிறைய பேர்களோட struggle (போராட்டத்திற்கு) பிறகுதான் பெண்களுக்கு கல்வி கிடைக்க ஆரம்பித்தது.

இனியன்: யாரைப் பத்தி பேசிட்டு இருக்குறீங்க?

உமையாள்:சாவித்திரி பாய் புலே. இவங்களோட பிறந்த நாள் 3 January 1831.

மித்ரன்: Library யில் இவங்களைப் பற்றிய ஒரு சிறுவர் கதைப்புத்தகம் இருக்குது.

இசை: ஆமாம். அதை படித்த பிறகு, சாவித்திரி அம்மா தான் கல்விக்காக எவ்வளவு போராடியிருக்கிறாங்கன்னு எனக்கு தெரிய வந்தது.

பாட்டி: இப்படி, அடுத்ததடுத்து கால, நேரப்படி நடக்கக் கூடிய தொடர் நிகழ்வுகளைப் பற்றி பேசக் கூடிய Conjunction என்ன தெரியுமா?

இசை: After பாட்டி.

பாட்டி: Very good. அப்புறம் then, first போன்ற வார்த்தைகளை after, உடன் இணைத்து பயன்படுத்தக் கூடாது.

மித்ரன்: ஏன் பாட்டி?

பாட்டி: ஏன்னா, இந்த வார்த்தைகளும் காலநேரத்தை குறிக்கக் கூடிய வார்த்தைகள்தான். ஒரே அர்த்தம் கொண்ட, வேறு வேறு வார்த்தைகள் தொடர்ந்து வருமா?

மித்ரன்: வராது பாட்டி.

(தொடரும்)

கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in