கொஞ்சம் technique கொஞ்சம் English - 105: Adverb of focus - மாண்டஸ் சூறாவளி கரையை கடந்துருச்சா?

கொஞ்சம் technique கொஞ்சம் English - 105: Adverb of focus - மாண்டஸ் சூறாவளி கரையை கடந்துருச்சா?
Updated on
2 min read

இசை: Bat இங்க இருக்குது. Ball-ஐ காணோம்.

இனியன்: ஆகா, playground-லயே விட்டுட்டு வந்துட்டோம். சரி நான் மட்டும் (alone – தனியாக) போய் எடுத்துட்டு வரேன். (I will go alone and take.)

உமையாள்: வெளியே கொஞ்சம் பாரு. பயங்கரமா இருட்டிட்டு இருக்குது.

இசை: (Also – தவிர) காத்தும் பலமா அடிக்குதுடா. (The wind is also blowing too hard.)

மித்ரன்: மழை தாமதமாகத்தான் வரும்ன்னு நினைக்கிறேன். (Rain will come late)

உமையாள்: Cyclone Mandous (மாண்டோஸ் சூறாவளி) இப்போ (just – சரியாக) தான் கரையை கடந்ததுன்னு news-ல சொல்லிட்டு இருக்காங்க. (Cyclone Mandous has just made landfall.)

இசை: ரெண்டு நாளைக்கு பயங்கரமா மழை பெய்யுறதுக்கு வாய்ப்பு இருக்குதாம். பெரும்பாலும் (mostly) வெளிய போகாமல் இருப்பது ரொம்ப நல்லது. (Mostly it will be good not to go out.)

உமையாள்: குறிப்பாக (especially) கடலோர மாவட்டங்களில் புயல் மழை இருக்கப் போகுதுன்னு சொல்லுறாங்க. (There will be stormy rain especially in the coastal districts.)

இனியன்: நான் புயல் மழையை பற்றி கேள்விப்பட்டதே இல்லை. (I have never even heard about cyclone rain)

மித்ரன்: நான் புயல் மழையை பற்றி சமீபத்தில் கேள்விப்பட்டேன். (Lately, I came to know about cyclone rain.)

இனியன்: பசிக்குது, சாப்பிடலாமா?

இசை: குறிப்பா (Especially) சூடா இருந்தால் நல்லா இருக்கும்ன்னு தோணுது. (Especially if it is hot, it will be good.)

மித்ரன்: முக்கியமா (Mainly) உருளைக்கிழங்கு போண்டா இருந்தா ரொம்ப நல்லா இருக்கும். (Mainly hot potato Bonda are good to have now.)

பாட்டி: இதோ போண்டாவோட பாட்டி வந்துட்டேன். நீங்க பேசியது எல்லாமே கேட்டுட்டு இருந்தேன்.

மித்ரன்: போண்டா கொண்டு வந்ததுக்கு thanks பாட்டி.

பாட்டி: ஒண்ணு தெரியுமா. நீங்க எல்லாரும் இப்ப Focusing adverb ஐ அதிகமா பயன்படுத்தி பேசிட்டு இருந்தீங்க.

இனியன்: அப்படின்னா என்ன?

பாட்டி: நாம பேசும்போது ஏதோ ஒரு வார்த்தைக்கு தனிக் கவனம் (attention) கொடுக்க வேண்டி இருக்கும். அந்த வார்த்தையுடன் focusing adverb-ஐ சேர்க்கும்போது அந்த வார்த்தைக்கு special attention கிடைக்கும்.

மித்ரன்: Attention ஆ?

பாட்டி: ஆமாம் attentionதான். இந்த Focusing adverb-ஐ Adverb of Focus என்றும் சொல்லலாம்.

இனியன்: Focusing adverb-ஐ எங்கெல்லாம் பயன்படுத்த வேண்டும்?

பாட்டி: Noun, Verb, adjective, preposition, adverb ஆகிய அனைத்து வார்த்தைகளுடனும் சேர்ந்து Focusing adverb-ஐ பயன்படுத்த முடியும்.

மித்ரன்: Adverb of focus ற்கு பயன்படுத்தக் கூடிய words list இருக்குதா பாட்டி?

பாட்டி: இதோ இருக்குதுடா செல்லம்.

(தொடரும்)

கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in