

இசை: பாட்டி, Present perfect tense பத்தி இன்னும் தெரிஞ்சுக்க ஆசையா இருக்கு. “தண்ணீர் குடித்திருக்கிறேன்” அப்படின்னு சொல்றதுக்கும், தண்ணீர் குடித்தேன்-னு சொல்றதுக்கும் என்ன வித்தியாசம்?
பாட்டி: தண்ணீர் குடித்திருக்கிறேன் என்றால் தண்ணீர் என்ற ஒன்றை பற்றிய ஒரு அறிமுகம் ஏற்கெனவே இருக்கிறது. அதனை எப்போதோ ஒரு காலகட்டத்தில் குடித்திருக்கிறாய். மேலும் இனிமேலும் குடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று பொருள். இந்த வகை வினையை மேலும் தொடர வைக்க முடியும். இதற்கு பெயர் present perfect tense.
இனியன்: மேற்கொண்டு சொல்லுங்க பாட்டி...
பாட்டி: தண்ணீர் குடித்தேன் என்றால், நடந்து முடிந்து விட்டது. உனது tumbler-ல் உள்ள தண்ணீர், நீ குடித்ததால் காலி ஆகிவிட்டது. அந்த tumbler-ல் உள்ள தண்ணீர் இனி இல்லை. முடிந்தது முடிந்தது தான். இதற்கு பெயர் past tense.
இனியன்: புரியுது பாட்டி. அப்படின்னா past perfect tense எப்படி இருக்கும்?
பாட்டி: கடந்த காலத்தில் நடந்த ஒன்றை, நடந்திருக்கிற ஒன்றாக நாம் விவரிக்கும்போது past perfect tense-ல் சொல்லுவோம். இங்க பாருங்களேன்
I had drunk water - நான் தண்ணீர் குடித்திருந்தேன்
We had drunk water - நாங்கள் தண்ணீர் குடித்திருந்தோம்
You had drunk water - நீ/ நீங்கள் தண்ணீர் குடித்திருந்தாய் / குடித்திருந்தீர்
He had drunk water - அவன்/அவர் தண்ணீர் குடித்திருந்தார்
She had drunk water - அவள் தண்ணீர் குடித்திருந்தான்/குடித்திருந்தார்.
It had drunk water - அது தண்ணீர் குடித்திருந்தது
They had drunk water - அவர்கள் தண்ணீர் குடித்திருக்கிறார்கள்
குடித்திருக்கிறேன் என்பது present perfect tense
குடித்திருந்தேன் என்பது past perfect tense
இசை: புரியுது பாட்டி
பாட்டி: இங்கு past perfect sentence-ல் ஒரு ஒற்றுமை இருக்கிறது. என்னவென்று யோசிச்சுட்டு வாங்க நாளை பேசுவோம்...
(தொடரும்)
கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்
முந்தைய அத்தியாயம் | கொஞ்சம் technique கொஞ்சம் English - 22: அந்த keyword-ஐ கண்டுபிடிக்கலாமா!