கொஞ்சம் technique கொஞ்சம் English - 22: அந்த keyword-ஐ கண்டுபிடிக்கலாமா!

கொஞ்சம் technique கொஞ்சம் English - 22: அந்த keyword-ஐ கண்டுபிடிக்கலாமா!
Updated on
1 min read

பாட்டி: Future perfect என்றால் நடந்து முடிந்து இருக்கும் என்று எண்ணக் கூடிய ஒன்றை எதிர்காலத்தில் (future tense) சொல்வது என்று சொல்லலாம் என்று சொல்லி கடந்த வாரம் முடித்தோம். மேற்கொண்டு இன்னைக்கு பேசுவோமா?

இசை & இனியன்: நிச்சயமா பாட்டி... நாங்களும் அதை தெரிஞ்சிக்கதான் ஆவலாக இருக்கோம்

பாட்டி: முதல்ல இந்த example ஐ பாருங்கள்.

I have drunk water - நான் தண்ணீர் குடித்திருக்கிறேன்
We have drunk water - நாங்கள் தண்ணீர் குடித்திருக்கிறோம்
You have drunk water - நீ/ நீங்கள் தண்ணீர் குடித்திருக்கிறாய் / குடித்திருக்கிறீர்
He has drunk water - அவன்/அவர் தண்ணீர் குடித்திருக்கிறார்
She has drunk water - அவள் தண்ணீர் குடித்திருக்கிறாள்
It has drunk water - அது தண்ணீர் குடித்திருக்கிறது
They have drunk water - அவர்கள் தண்ணீர் குடித்திருக்கிறார்கள்

இசை & இனியன்: ஓகே பாட்டி...

பாட்டி: இதில் third person singular. அதாவது he, she, it -க்கு மட்டும் has என்கிற auxiliary verb (துணை வினை) வரும். மற்ற subject எல்லாவற்றுக்கும் have என்கிற auxiliary verb வரும்.

பாட்டி: இங்கு present perfect sentence-ல் ஒரு ஒற்றுமை இருக்கிறது. என்னவென்று கண்டுபிடிக்க முடிகிறதா?

இனியன்: ‘யிரு’ என்கிற வார்த்தை எல்லா sentence லையும் இருக்கு பாட்டி.

இசை: அப்போ, ‘யிரு’ தான் keyword ஆ .

பாட்டி: correct ஆஹா கண்டுபிடிச்சிட்டிங்களே. very good.

இனியன்: friends, நீங்களும் eat வச்சு எழுதிட்டு வந்துடுங்க. நாளைக்கு பார்க்கலாம்.

Fill in the blanks

I have eaten cake
We _____________________________
You _____________________________
He _____________________________
She _____________________________
It _____________________________
They _____________________________

கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in