

இனியன்: பாட்டி, Future in the past வாக்கியம் English இல் எப்படி இருக்கும்?
மித்ரன்: கொஞ்சம் விளக்குங்களேன்.
பாட்டி: எதிர்காலத்தைப் (Future Tense) பற்றி பேசும்போது, அந்த இடத்தில் எந்த வார்த்தை மிக முக்கிய வார்த்தையாக இருக்கும்?
இசை: Will என்ற auxiliary verb பாட்டி.
உமையாள்: Main verb ற்கு முன்னால் will-ஐ சேர்த்து பயன்படுத்துவோம்.
பாட்டி: Correct.
இனியன்: Alright. அப்படியென்றால் Future in the past sentence-இல் எந்த auxiliary verb-ஐ பயன்படுத்த வேண்டும்?
மித்ரன்: Will-ஐ சேர்த்தால், Future Tense ஆகிவிடும்.
பாட்டி: Willற்கும் past tense இருக்குது.
இசை: Would தானே?
பாட்டி: You are right.
உமையாள்: கடந்த காலத்தில் உள்ள எதிர்காலத்தைப் (Future in the past) பற்றி எடுத்துச் சொல்ல, would-ஐ பயன்படுத்த வேண்டும்.
பாட்டி: இங்கே, சில Examples கொடுத்திருக்கிறேன். வாசிச்சு பாருங்க.
(தொடரும்)
- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்