கொஞ்சம் Technique கொஞ்சம் English 285: First Conditional Statement - வாய்ப்பு இருக்கிறது!

கொஞ்சம் Technique கொஞ்சம் English 285: First Conditional Statement - வாய்ப்பு இருக்கிறது!
Updated on
1 min read

இசை: Main clause ஆனது Future tense இல் வந்தால், first conditional statement-ன்னு சொன்னீங்களே பாட்டி.

மித்ரன்: அதை கொஞ்சம் விளக்கி சொல்லுங்க.

பாட்டி: சொல்லுறேன். எல்லாரும் தண்ணீர் குடிச்சிக் கோங்க.

இனியன்: எனக்கு வேண்டாம் பாட்டி. கொஞ்ச நேரத்துக்கு முன்னால் தான் குடிச்சேன்.

பாட்டி: பரவாயில்லை இனியன். இந்த தண்ணீரை குடி.

இனியன்: இல்லை பாட்டி. என்னால் இப்போது குடிக்க முடியாது.

பாட்டி: கொஞ்சமாவது குடியேன்.

இனியன்: வேண்டாம் பாட்டி. எனக்கு தாகம் எடுத்தால், நான் தண்ணீர் குடிப்பேன். இப்போது வேண்டாம்.

பாட்டி: நீ என்ன சொன்னாய். திருப்பி சொல்லு.

இனியன்: எனக்கு தாகம் எடுத்தால், நான் தண்ணீர் குடிப்பேன்.

பாட்டி: இப்போ நீ சொன்ன வாக்கியம் தான் First Conditional Statement.

இசை: If I feel thirsty, I will drink water.

பாட்டி: ஒரு செயலின் மூலம் கிடைக்கும் விளைவு, உண்மையானதாக இருக்கும் வேளையில் First Conditional Statement -ஐ நாம் பயன்படுத்தலாம்.

உமையாள்: தாகம் எடுத்தால், தண்ணீர் குடிப்பேன் என்பது உண்மையே.

மித்ரன்: இது நடப்பதற்கு சாத்தியம் (வாய்ப்பு)இருக்கிறது.

பாட்டி: இங்கு main clause ஆனது Future tense இல் இருக்கும்.(I will drink water)

பாட்டி: Conditional clause வழக்கம் போல் present tense இல் இருக்கும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in