

இனியன்: Who’s pen is this?
இசை: என்ன sentence இது?
இனியன்: “யாருடைய pen இது”ன்னு எழுதி இருக்கிறேன்.
பாட்டி: நல்லா பார்த்து சொல்லு. நீ என்ன எழுதியிருக்கிற?
இனியன்: அச்சச்சோ apostrophe போட்டு வச்சிருக்கிறேன்.
மித்ரன்: Whose என்பதற்கு meaning தான் “யாருடைய”
மித்ரன்: Sometimes தேவையில்லாத இடத்துல apostrophe போட்டு வச்சிடுறேன்.
உமையாள்: அதனால mark தேவையில்லாம குறைஞ்சிடும்.
இனியன்: Who is ன் short form தானே Who’s
பாட்டி: ஆமாம். “Who” என்பதற்கு “யார்” என்று அர்த்தம்.
இசை: Note இல் எழுதியிருக்கிற sentence ஐ மாத்தி சரியாக எழுது
இனியன்: Whose pen is this? (யாருடைய பேனா இது)
(தொடரும்)
- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்.