சமூகத்துக்கான கண்டுபிடிப்பு

சமூகத்துக்கான கண்டுபிடிப்பு
Updated on
1 min read

சமூகத்தில் களையப்பட வேண்டிய சிக்கல்களுக் கான தீர்வுகளை எதிர்பார்த்து ஏராளமானப் பிரச்சினைகள் இருக்கின்றன. குறிப்பாகப் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கும் காலத்தில் அது சார்ந்து சிந்தித்துச் செயல்பட்டால் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் கண்டுபிடிப்புகள் நிச்சயம் உருவாகும்.

தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ந்தாலும் கழிவுநீர் கால்வாய்களைச் சுத்தம் செய்வது, பாதாளச் சாக்கடை அடைப்பைச் சரி செய்வது என்பது போன்ற சிக்கல்களுக்கு முழுமையான தீர்வு கிடைத்தபாடில்லை.

நவீன வளர்ச்சி நன்மையைக் காட்டிலும் சிலநேரம் கூடுதலாகத் தீமையை விளைவிக்கிறது. திறன்பேசியின் வரவு ஒரு விதத்தில் நன்மை என்றால், இன்றைக்குப் பல்வேறு விதங்களில் படிக்கும் மாணவர்களுக்கு அதுவே சிக்கலாக மாறி இருக்கிறது.

அறிவியல் கண்டுபிடிப்பைப் பயன்படுத்துவதைப் பொறுத்து அதன் நன்மை, தீமை இருக்கும். குறிப்பாக வாகனங்களில் இருந்து வெளிவரும் நச்சுப்புகை காற்றை அசுத்தம் செய்துவிடுகிறது. ஞெகிழிக் கழிவுகள் மண்ணுக்கும் இயற்கைக்கும் மிகப்பெரிய பாதகமாக உள்ளன.

நீர்நிலைகள் அசுத்தமடைகின்றன. நிலம், நீர், காற்று, நெருப்பு, வெளி என ஐம்பூதங்களும் சிதைக்கப்படாமல் காப்பதற்கான அறிவியல் கண்டுபிடிப்புகள் அவசியம்.

- ப. அபிநயா, 11-ம் வகுப்பு,  விஜய் மில்லேனியம், சிபிஎஸ்இ பள்ளி, தருமபுரி.

சமூகத்துக்கான கண்டுபிடிப்பு
காலங்களை இணைக்கும் குவாண்டம் தையல் | அணு முதல் அண்டவெளி வரை 13

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in