

மாணவர்கள் மத்தியில் ராகிங் தடுக்க கல்லூரி மாணவர்கள் ராகிங் தடுப்பு உறுதிச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என யுஜிசி உத்தரவிட்டுள்ளது. கல்லூரிகளில் மாணவர்கள் சீண்டலில் ஈடுபடுவதும், அது மிகப்பெரிய பிரச்சினையாக வெடிப்பதும் நெடுங்கால கதை. இதனை தடுக்க சட்டதிட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. கல்லூரிகளும் ராகிங்கை தடுக்க நடவடிக்கை எடுக்கவே செய்கின்றன. ஆனாலும் கல்லூரிகளில் மாணவர்கள் ராகிங்கில் ஈடுபடும் சம்பவங்கள் சமூக ஊடகங்களின் வாயிலாக அவ்வப்போது வெளி வருகிறது. இந்நிலையில், ராகிங்கில் ஈடுபடும் குற்றவாளிகளுக்குத் தக்க தண்டனை வழங்காத சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மீது யுஜிசி நடவடிக்கை எடுக்கும் என்றும் மாணவர்கள் அனைவரும் ராகிங் தடுப்பு உறுதி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதுபோல பள்ளி பருவத்திலிருந்தே மாணவர்களிடம் காணப்படும் குணநலன்களை வைத்து அவர்கள் எதிர்காலத்தில் என்னவாக மாறக்கூடும் என்பதை இரண்டாவது பெற்றோரான ஆசிரியர்களால் கணிக்க முடியும். அந்த வகையில் பள்ளி நாட்களில் இருந்தே சக மாணவர்களுடன் குறிப்பாக எதிர் பாலினத்தவருடன் ஒழுக்கமாகவும் கண்ணியமாகவும் பழக வேண்டியதன் அவ சியத்தை ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் பயிற்றுவிக்க வேண் டும். இதனை கண்டிப்பான முறையிலோ, உபதேசமாகவோ செய்யாமல் அன்போடும் அரவணைப்போடும் செய்து வந்தால் கட்டாயம் கல்லூரிக்குள் அடியெடுத்து வைக்கும் எந்த ஒரு மாணவருக்கும் சீண்டலில் ஈடுபடும் எண்ணமே துளிர்க்காது.