கல்வியால் மட்டுமே மாற்றம் சாத்தியமா? - ஓர் ஆசிரியக் கனவு 1

கல்வியால் மட்டுமே மாற்றம் சாத்தியமா? - ஓர் ஆசிரியக் கனவு 1
Updated on: 
2 min read

பள்ளியொன்றில் 10ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் 9ஆம் வகுப்பு மாணவரைக் கொடூரமாகத் தாக்குகிறார். ஆசிரியர்களின் குரலை அவர் சட்டை செய்யவே இல்லை. 11ஆம் வகுப்பு மாணவர்கள் குழுவாகத் தாக்கியதில் 12ஆம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பள்ளியொன்றில் ஒரு மாணவரைச் சிலர் அடிக்க, சிலர் அதைத் திறன்பேசியில் பதிவுசெய்கிறார்கள். ஆடம்பரப் பொருள் களின் மீதான ஆர்வம் திருட்டு, வழிப்பறி சார்ந்த வன்முறைகளுக்கு ஆணிவேராக இருக்கிறது. இது ஒருபுறம்.

அயல் மண்ணில்... தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள பள்ளி ஒன்றில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் துப்பாக்கிச் சூடு. செய்தியைப் பார்த்ததும் மனம் பதைபதைத்தது. ஒருவார காலமாக அந்தக் கொடூரச் சம்பவம் குறித்து வந்த செய்திகளை கவனித்துக்கொண்டே இருந்தேன்.

அது 14 வயது மாணவரின் செயல். அமைதியான மாணவர் என்றே சொல்கி றார்கள். படிப்பில் பின்தங்கியவர். தாய் மொழிப் பாடத்திலும்கூடச் சரியாகப் படிக்கவில்லை என ஆசிரியர் கண்டிப்பது வழக்கம். அவரது சிறு வயதிலேயே பெற்றோர் மணவிலக்குப் பெற்றுவிட்டனர்.

தாத்தா, பாட்டியின் பராமரிப்பில் வளர்ப வர். ஆகஸ்டு 7, காலையில் எழுந்து பள்ளிக்குக் கிளம்பும் முன் தனது தாத்தா, பாட்டியைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டார். பள்ளி தொடங்கிய சிறிது நேரத்தில் வகுப் பறைகளில் இருந்த ஆசிரியர்களை சுடத் தொடங்கினார். துப்பாக்கிச் சத்தம் கேட்டதுமே வகுப்பறைகளில் இருந்த மாணவ, மாணவியர் பயந்து நடுங்கி இருக்கைகளுக்குக் கீழே ஒடுங்கினர். ஆசிரியர்கள் வகுப்பறைக் கதவுகளை அடைத்தனர்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in