அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கியது; எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கியது; எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு
Updated on
1 min read

அரசுப் பள்ளிகளில் 1, 6, 9-ம் வகுப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கை இன்று தொடங்கி, நடைபெற்று வருகிறது. கரோனா பொருளாதார சூழலால் இந்த ஆண்டு மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் சற்று தணியத் தொடங்கியுள்ள நிலையில் முதல்கட்டமாகப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைப் பணிகளுக்கு மட்டும் அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி அரசுப் பள்ளிகளில் 1, 6, 9-ம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இன்று (ஆக.17) தொடங்கியுள்ளது.

தனிமனித இடைவெளி, சானிடைசர் பயன்பாடு, முகக்கவசம் ஆகியவற்றைக் கடைப்பிடிப்பதுடன் தெர்மல் ஸ்கேனர் மூலம் காய்ச்சல் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவர் சேர்க்கை முடிந்த உடனேயே அவர்களுக்கு விலையில்லாப் பாடப் புத்தகங்களும் நோட்டுகளும் வழங்கப்பட்டன. இதுதொடர்பாக வழிகாட்டுதலை ஏற்கெனவே பள்ளிக் கல்வி இயக்குநரகம் வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

கரோனா ஊரடங்கால் பெரும்பாலான மக்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் அதிகரித்துள்ளதால் அரசுப் பள்ளிகளை நோக்கி பெற்றோரின் கவனம் திரும்பியுள்ளது. இதனால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in