

விஜயபுரம்: நாட்டின் ஒரே எரிமலை அந்தமான் அருகேயுள்ள பேரன் தீவில் அமைந்துள்ளது. இங்கு கடந்த 1787, 1991, 2005, 2017, 2022 மற்றும் இந்தாண்டு செப்டம்பர் மற்றும் நவம்பரில் எரிமலை சீற்றம் ஏற்பட்டது.
புத்தாண்டு முதல் நாள் இந்த எரிமலை அமைந்திருக்கும் தீவை பார்வையிட்டு திரும்புவதற்கு அந்தமான் - நிகோபார் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த திட்டத்தில் எம்.வி. ஸ்வராஜ் தீப் என்ற சொகுசு கப்பல் விஜயபுரம் பகுதியில் உள்ள ஹேடோ வார்ப் பகுதியில் இருந்து டிசம்பர் 31-ம் தேதி இரவு 9 மணிக்கு புறப்படும். இங்கிருந்து 140 கி.மீ. தூரம் உள்ள பேரன் தீவில் உள்ள எரிமலையை மிக அருகில் இருந்து பார்த்தபின் இந்த கப்பல் ஜனவரி 1-ம் தேதி காலை 2 மணிக்கு விஜயபுரம் திரும்பும். ஒருவருக்கு ரூ.3,180 முதல் ரூ.8,310 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.