விமான ஓடுதளத்தில் தேர்வு: 187 இடத்துக்கு 8,000 பேர் போட்டி

விமான ஓடுதளத்தில் தேர்வு: 187 இடத்துக்கு 8,000 பேர் போட்டி
Updated on
1 min read

புவனேஸ்வர்: ஒடி​சா​வின் சம்​பல்​பூர் மாவட்​டத்​தில் ஊர்க்​காவல் படை​யில் 187 காலிப் பணி​யிடங்​கள் ஏற்​பட்​டன.

இதற்​கான எழுத்​துத் தேர்வு கடந்த 16-ம் தேதி சம்​பல்​பூரில் நடை​பெற்​றது. இதில் 8 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் கலந்​து​கொண்​டனர். அவர்​கள் அனை​வரும் தேர்வு அறைக்கு பதிலாக விமான ஓடு​தளத்​தில் வரிசை​யாக அமர வைக்​கப்​பட்​டிருந்​தனர். தரை​யில் அமர்ந்​த​படியே அனை​வரும் தேர்வை எழுதி முடித்​தனர்.

தேர்​வர்​கள் வெட்ட வெளி​யில் தேர்வு எழுதும் வீடியோ சமூக வலை​தளங்​களில் பரவி பேசுபொருளாகியது. மேலும் 5-ம் வகுப்பு தேர்ச்சி மட்​டுமே தகு​தி​யாகக் கொண்ட இந்​தப் பணிக்கு தினசரி படி​யாக ரூ.639 வழங்​கப்​படு​கிறது. இந்​நிலை​யில் இந்த தேர்​வில் எம்​பிஏ, எம்​சிஏ என முது​நிலை பட்​டம் பெற்​றவர்​களும் பங்​கேற்​றனர். இது வேலை​யின்​மை​யின் தீவிரத்தை காட்​டு​வ​தாக பலர் கருத்து தெரி​வித்து வரு​கின்​றனர்.

விமான ஓடுதளத்தில் தேர்வு: 187 இடத்துக்கு 8,000 பேர் போட்டி
பிரதமர் மோடி தலைமையில் தலைமை செயலாளர்கள் மாநாடு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in