பூத்துக் குலுங்கும் சூரியகாந்தி பூக்கள்: திடீர் சுற்றுலா தலமான விருதுநகர் - சாத்தூர் சாலை!

சூரியகாந்தி தோட்டத்தில் புகைப்படம் எடுத்த இளம்பெண்.

சூரியகாந்தி தோட்டத்தில் புகைப்படம் எடுத்த இளம்பெண்.

Updated on
1 min read

விருதுநகர்: பூத்துக் குலுங்கும் சூரிய காந்தி பூக்களால் விருதுநகர்- சாத்தூர், விருதுநகர்- அருப்புக்கோட்டை சாலைகள் திடீர் சுற்றுத்தலமாக மாறியுள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 16,774 ஏக்கரில் சூரிய காந்தி பயிரிடப்பட் டுள்ளது. குறிப்பாக விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சூரியகாந்தி அதிக அளவில் சாகுபடி செய்யப் பட்டுள்ளது.

அறுவடைக் காலம் நெருங்குவதையொட்டி வயல்களில் சூரிய காந்தி பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. இதைப் பார்க்க இளைஞர்களும், சிறுவர்களும் ஏராளமானோர் வரத் தொடங்கியுள்ளனர். இதனால் விருதுநகர்- சாத்தூர் சாலை, விருதுநகர்- அருப்புக்கோட்டை சாலைகள் திடீர் சுற்றுலாத்தலமாக மாறியுள்ளன.

சாலையின் இருபுறமும் விரிந்துள்ள மஞ்சள் நிற சூரியகாந்தி வயல்கள், சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளையும் பயணிகளையும் கண்ணைக் கவரும் வகையில் காட்சியளிக்கின்றன.

தொடர் விடுமுறைக்காக பெங்களுரூ, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய பகுதிகளிலிருந்து தென்மாவட்டங்களுக்கு கார்களில் செல்வோர் பலர் சாலையோரத்தில் கார்களை நிறுத்தி சூரியகாந்தி வயல்களுக்குள் சென்று பூக்களோடு குழு புகைப் படமும் செல்ஃபியும் எடுத்து மகிழ்கின்றனர்.

சுற்றுவட்டார பகுதியினரும் மாலை நேரத்தில் குடும்பத்தோடு வந்து ரசிப்பதும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, சமூக வலைதளங்களில் சூரியகாந்தி வயல்களின் புகைப்படங்கள் மற்றும் காணொ லிகள் பரவத் தொடங்கி யதையடுத்து அண்டை மாவட்டங்களிலிருந்தும் மக்கள் இந்தப் பகுதிக்கு வருகை தரத் தொடங்கியுள்ளனர். இதனால், விருதுநகர் - சாத்தூர், விருது நகர்- அருப்புக்கோட்டை சாலை கள் திடீர் சுற்றுலாப் பகுதியாக மாறியுள்ளன.

<div class="paragraphs"><p>சூரியகாந்தி தோட்டத்தில் புகைப்படம் எடுத்த இளம்பெண்.</p></div>
லஜக பரப்புரை பொதுச் செயலாளராக நடிகர் தாடி பாலாஜி நியமனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in