12 புதிய கூடங்களுடன் விரிவு பெறும் வேலூர் கோட்டை அருங்காட்சியகம்!

வேலூர் அரசு அருங்காட்சியகத்தில் புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்டு வரும் கற்சிற்பக்கூடம். | படங்கள்: வி.எம்.மணிநாதன் |

வேலூர் அரசு அருங்காட்சியகத்தில் புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்டு வரும் கற்சிற்பக்கூடம். | படங்கள்: வி.எம்.மணிநாதன் |

Updated on
2 min read

வேலூர்: வேலூர் அரசு அருங்காட்சியகம் 2025-ம் ஆண்டில் 1.15 லட்சம் பார்வையாளர்களை கவர்ந்து ரூ.10.18 லட்சம் வருவாய் ஈட்டியுள்ளது. வேலூர் கோட்டையில் தமிழக அரசின் அருங்காட்சியகம் உள்ளது. சுமார் 22 ஆயிரம் சதுரடி பரப்பளவு கொண்ட இடத்தில் 5 ஆயிரம் சதுரடியில் உள்ள கட்டிடத்தில் கற்சிற்ப கூடம், முந்து வரலாற்று கூடம், நாணய கூடம், ஓவியக்கூடம், விலங்கியல் கூடம், படிமங்கள் கூடம், மானுடவியல் கூடம், மாவட்ட தகவல் கூடம் என மொத்தம் 8 கூடங்களுடன் இயங்கி வருகின்றது.

வேலூர் மாவட்டத்தின் வரலாற்றையும், பண்பாட்டையும் நினைவுகூறும் வகையில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகத்தை தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள், பள்ளி மாணவ, மாணவிகள் கண்டுகளித்து செல்கின்றனர். அரசு அருங்காட்சியகத்தில் பெரியவர் களுக்கு ரூ.10, சிறியவர்களுக்கு ரூ.5 மற்றும் வெளிநாட்டு பார்வையாளர் களுக்கு தலா ரூ.100 வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பள்ளி மாணவ, மாணவிகள் இலவசமாக பார்த்துச் செல்லலாம்.

வேலூர் அரசு அருங் காட்சியகம் மற்ற மாவட்டங்களில் அருங் காட்சியகங்களுக்கு முன் மாதிரியாகவும் செயல்பட்டு வருகிறது. வேலூர் கோட்டைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் அரசு அருங் காட்சியகத்தை பார்த்துச் செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். குறிப் பாக, வேலூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் உள்ள டயனோசர் உருவ பொம்மை இன்றளவும் பார்வையா ளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதன் மறு உருவாக்கமாக நவீன தொழில்நுட்பத்தில் ஒலி, ஒளி அமைப்புடன் டயனோசர் உருவ பொம்மை அருங்காட்சியகத்தின் உள்ளே காட்சிப்படுத்தியிருப்பதை குழந்தை கள் ஆச்சர்யத்துடன் பார்த்து விட்டு செல்கின்றனர். 1.15 லட்சம் பார்வையாளர்கள் 2025-ம் ஆண்டில் வேலூர் அரசு அருங் காட்சியகத்தை 1 லட்சத்து 15 ஆயிரத்து 934 பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

விரிவாக்கம் செய்யப்பட்டு வரும் சமணர் சமய சிற்பக்கூடம்.

விரிவாக்கம் செய்யப்பட்டு வரும் சமணர் சமய சிற்பக்கூடம்.

இதில், 77 ஆயிரத்து 526 பேர் பெரியவர்களும், 27 ஆயிரத்து 373 பேர் சிறியவர்களும், மாணவர்கள் 10 ஆயிரத்து 868 பேரும், வெளி நாட்டினர் 167 பேரும் அடங்குவர். அரசு அருங்காட்சியக பார்வையாளர்கள் மூலம் நுழைவு கட்டணமாக கடந்தாண்டு ரூ.10 லட்சத்து 18 ஆயிரத்து 325 தொகை அரசு கருவூலத்தில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

பார்வையாளர்கள் எண்ணிக்கை கடந்த 2024-ம் ஆண்டை விட கடந்த ஆண்டு சுமார் 3 ஆயிரம் பேர் குறைவு என கூறப்படுகிறது. எனினும், அரசு அருங்காட்சியகம் விரிவாக்க பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் முடிந்ததும் வேலூர் அரசு அருங்காட்சியகத்துக்கு கூடுதலான பார்வையாளர்கள் வருவார்கள் என கூறப்படுகிறது.

47 ஆயிரம் சதுரடியில் விரிவாக்கம் தற்போதுள்ள அரசு அருங்காட்சிகயத் துக்கு எதிரே சுமார் 25 ஆயிரம் சதுரடி இடத்தில் உள்ள 7 ஆயிரம் சதுரடி கட்டிடம் அருங்காட்சியம் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், சென்னைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அருங்காட்சியமாக வேலூர் மாற உள்ளது.

சுமார் 47 ஆயிரம் சதுரடி பரப்பளவுடன் விரிவடையும் அருங்காட்சியக வளாகத்தில் புதிதாக 12 கூடங்கள் அமையவுள்ளன. இதில், மாவட்ட சுற்றுலா தகவல் கூடம், சுடுமண் சிற்பக்கூடம், வேலூர் சிப்பாய் புரட்சி கூடம், கற்சிற்ப கூடம், ஓவியக்கூடம், அஞ்சல்தலை கூடம், சமண சமய சிற்பக்கூடம், இயற்கை அறிவியல் கூடம் மற்றும் சிறுவர் அருங்காட்சியகம் அறிவியல் கூடமாக மாற்றப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

வேலூர் அரசு அருங்காட்சியகத்தில் புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்டு வரும் கற்சிற்பக்கூடம். | படங்கள்: வி.எம்.மணிநாதன் |

“மாவட்டச் செயலாளர்கள் கருத்துகளின்படியே தேர்தல் கூட்டணி” - பிரேமலதா விஜயகாந்த் உறுதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in