“மாவட்டச் செயலாளர்கள் கருத்துகளின்படியே தேர்தல் கூட்டணி” - பிரேமலதா விஜயகாந்த் உறுதி

Premalatha Vijayakanth

பிரேமலதா விஜயகாந்த்

Updated on
1 min read

சென்னை: “2026 தேர்தலில் யாருடன் கூட்டணி என மாவட்டச் செயலாளர்கள் தங்களின் கருத்துகளை எழுதி பெட்டியில் போட்டுள்ளனர். அவர்களின் கருத்து அந்தந்த மாவட்ட மக்களின் கருத்து. அதன்படியே கூட்டணியை முடிவு செய்து வரும் 9-ம் தேதி கடலூர் மாநாட்டில் அறிவிப்பேன்” என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 9-ம் தேதி நடைபெற உள்ள மாநாட்டுப் பணிகள் குறித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில், அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

மேலும், மாநாட்டுக்கு தொண்டர்களை அழைத்து வருவது, சட்டப்பேரவைத் தேர்தலை சந்திப்பது, கூட்டணி குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

பின்னர், பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. தேர்தலை ஒட்டி, பல திட்டங்கள் அறிவிக்கப்படுகிறது. பொங்கல் பரிசுத் தொகை அனைவருக்கும் சென்று சேர வேண்டும்.

மாநாட்டுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது.

2026 தேர்தலில் யாருடன் கூட்டணி என மாவட்டச் செயலாளர்கள் தங்களின் கருத்துகளை எழுதி பெட்டியில் போட்டுள்ளனர். அவற்றை பிரித்து படிக்க இருக்கிறேன். அவர்களின் கருத்து அந்தந்த மாவட்ட மக்களின் கருத்து. அதன்படியே கூட்டணியை முடிவு செய்து வரும் 9-ம் தேதி கடலூர் மாநாட்டில் அறிவிப்பேன். தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தேமுதிகவுக்கு தோழமைக் கட்சி தான். திமுக 50% வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளனர்.

இன்னும் 50% வாக்குறுதிகளை நிறைவேற்ற இல்லை. திமுக ஆட்சியில் போதைப்பொருள் விற்பனை, சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. இதை யாரும் மறுக்க முடியாது. வரும் தேர்தலில் மக்கள் விரும்பிய அணி நிச்சயம் வெற்றி பெறும். ஆட்சியில் பங்கு என்ற குரல் இப்போது ஓங்கி ஒலிக்கிறது. அதற்கு சாத்தியமும் இருக்கிறது.

திமுக சிறந்த ஆட்சி கொடுத்ததா என்பதை மக்கள்தான் சொல்ல வேண்டும். ஆளும் கட்சியே சொல்லிக் கொள்ள முடியாது. நிச்சயமாக 2026 தேர்தல் ஒரு மாறுபட்ட தேர்தலாக இருக்கும்.

தை பிறந்தால் வழி பிறக்கும். வருகின்ற தேர்தலில், தமிழ்நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் நல்லது நடக்கும் ஒரு தேர்தலாக இருக்கும் இந்த நிமிடம் வரை உறுதியான கூட்டணியை யாரும் அறிவிக்கவில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Premalatha Vijayakanth
தஞ்சையில் நடைபெற இருந்த டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு தேதி மாற்றம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in