தொடர் விடுமுறை எதிரொலி - கொடைக்கானலில் கடும் போக்குவரத்து நெரிசல்

காருக்குள்ளேயே காத்திருந்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறை எதிரொலி - கொடைக்கானலில் கடும் போக்குவரத்து நெரிசல்
Updated on: 
1 min read

பழநி: கொடைக்கானலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஒரே இடத்தில் வாகனங்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் அவதிப்பட்டனர்.

‘மலைகளின் இளவரசி’ என்றழைக்கப்படும் கொடைக்கானலுக்கு வார விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும்.

இந்நிலையில் இன்று (அக்.2) காந்தி ஜெயந்தி விடுமுறை, சனி, ஞாயிறு விடுமுறை என 3 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக காலை முதலே கொடைக்கானலுக்கு அதிக எண்ணிக்கையிலான வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். இதனால் காலை முதலே நகரின் பல பகுதிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

கொடைக்கானலின் நுழைவு பகுதியான வெள்ளி நீர்வீழ்ச்சி முதல் ஏரிச்சாலை வரை வாகனங்கள் ஊர்ந்தே சென்றன. இதற்கு இடைப்பட்ட பகுதியான சீனிவாசபுரம் முதல் மூஞ்சிக்கல் வரை வாகனங்கள் நகராமல் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்தன. வேறு வழியின்றி சுற்றுலாப் பயணிகள் காருக்குள்ளேயே முடங்கிக்கிடக்கும் நிலை ஏற்பட்டது.

பெருமாள் மலை முதல் வெள்ளி நீர்வீழ்ச்சி வரை 8 கி.மீ., தூரத்தை கடக்க 2 மணி நேரத்திற்கு மேலாகியது. போக்குவரத்து நெரிசலை கண்டுகொள்ள போலீஸார் போதிய அளவு இல்லை. அதேபோல், சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி விட்டு சென்றதும் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக இருந்தன.

பெருமாள் மலை பகுதியில் போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் வாகனமும் சிக்கி தவித்தது. அதிர்ஷ்டவசமாக உள்ளே நோயாளிகள் யாரும் இல்லாததால் பெரும் விபரீதம் தவிர்க்கப்பட்டது. கொடைக்கானல் நகர் மட்டுமின்றி மேல்மலை கிராமங்களிலும் வரலாறு காணாத அளவுக்கு கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர் விடுமுறை எதிரொலி - கொடைக்கானலில் கடும் போக்குவரத்து நெரிசல்
“விஜய் நடத்தும் ஜனநாயக படுகொலைக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள்” - ஆர்.பி உதயகுமார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in