தொடர் விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தொடர் விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
Updated on
1 min read

பழநி: ​விடுமுறை நாட்​களை முன்​னிட்டு, கொடைக்​கானலில் நேற்றுசுற்​றுலா பயணி​கள் கூட்​டம் அலைமோ​தி​யது.

பக்​ரீத் பண்​டிகை விடு​முறை, கோடை விடு​முறை​யால் கொடைக்​கானலில் பிரையன்ட் பூங்​கா, பைன் மரக்​காடு​கள், மோயர் சதுக்​கம், தூண் பாறை, ரோஜா பூங்கா, நட்சத்திர ஏரி உள்​ளிட்ட சுற்​றுலா தலங்​களை ஏராள​மான சுற்​றுலா பயணி​கள் சுற்​றிப் பார்த்​தனர்.

ஏராள​மான சுற்​றுலா வாக​னங்​களால் ஆங்​காங்கே சிறிது நேரம் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது. நேற்று பகலில் மேகமூட்​டம் காணப்​பட்​டது. பிற்​பகல் 1 மணிக்கு மேல் கொடைக்​கானல் மேல்​மலை, கீழ்​மலை பகு​தி​களில் அவ்​வப்​போது விட்டுவிட்டு சாரல் மழை பெய்​தது.

தரை​யிறங்கி வந்த மேகக் கூட்​டங்​கள், பனிமூட்​டத்​துக்கு நடு​வில் இயற்கை காட்​சிகளை மக்​கள் கண்டு ரசித்​தனர்.

தொடர் விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
நீதிபதிகளை புனிதர்களாக சித்தரிக்கும் அவசியமில்லை: ‘கருப்பு’ பட வழக்கில் நீதிபதிகள் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in