மதுரையில் ஜன.14, 17-ல் சுற்றுலா பொங்கல் விழா - என்ன ஸ்பெஷல்?

கோப்புப்படம்

கோப்புப்படம்

Updated on
1 min read

மதுரை: மதுரை மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளுக்காக ஜனவரி 14, 17 ஆகிய 2 நாட்கள் பொங்கல் சுற்றுலா விழா நடைபெறவுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழக சுற்றுலாத் துறை சார்பில், பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கலந்துகொள்ளும் வகையில் பொங்கல் விழா கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இவ்விழாவில் பங்கேற்கவுள்ள சுற்றுலா பயணிகள் வரும் 14-ம் தேதி காலை 8 மணிக்கு சுற்றுலா அலுவலகத்திலிருந்து தனி சிறப்பு பேருந்து மூலம் மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி கிராமத்துக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

அங்கு கிராம மக்கள் தமிழக பாரம்பரிய முறைப்படி சுற்றுலா பயணிகளை வரவேற்று, அவர்களை மாட்டுவண்டியில் ஊர்வலமாக அழைத்துச் செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பின்னர், கிராம மக்களுடன் சேர்ந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பொங்கல் வைக்கும் முறையை நேரடியாக கண்டு மகிழவும், சுற்றுலா பயணிகளுக்கு பொங்கல் வழங்கப்படவும் உள்ளது.

மேலும், பரதம், கிராமிய கலைநிகழ்ச்சிகள், தமிழக பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் ஆகியன நடைபெறுகின்றன. இரண்டாம் நாள் நிகழ்வாக வரும் 17-ம் தேதி உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் கிராமத்துக்கு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை மதுரை சுற்றுலா அலுவலகத்திலிருந்து காலை 10 மணியளவில் அரசு தனி சிறப்பு பேருந்து மூலம் அழைத்துச் சென்று, அங்கு நிரந்தரமாகவுள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை காண்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே, இந்த 2 நாட்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்பும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்களது பெயர், பாஸ்போர்ட் நகல் போன்ற விவரங்களுடன் எண் 1, மேலவெளி வீதியில் உள்ள மதுரை மாவட்ட சுற்றுலா அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு 0452-2334757, 9176995868 ஆகிய எண்களிலும், touristofficemadurai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம், என அவர் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>கோப்புப்படம்</p></div>
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் வழக்கில் நாளை தீர்ப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in