கொடைக்கானலில் அடர்ந்த பனிமூட்டம் - ரசித்த சுற்றுலாப் பயணிகள்

கொடைக்கானலில் அடர்ந்த பனிமூட்டம் - ரசித்த சுற்றுலாப் பயணிகள்
Updated on: 
1 min read

திண்டுக்கல்: கொடைக்கானலில் நாள் முழுவதும் நிலவிய அடர்ந்த பனிமூட்டத்தை சுற்றுலாப் பயணிகள் வியந்து ரசித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று (செப்.30) காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

வழக்கத்துக்கு மாறாக, காலை முதலே அடர்ந்த பனிமூட்டம் காணப்பட்டது. இது மாலை வரை நீடித்தது. இதனால் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் மட்டுமின்றி நடந்து செல்லும் ஆட்கள் கூட தெரியாத அளவு பனி மூட்டம் சூழ்ந்தது.

வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டு மலைச்சாலையில் மெதுவாக பயணித்தன. தரையிங்கி வந்த மேக கூட்டத்தின் நடுவில் சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இருப்பினும், பகலிலேயே பனிமூட்டம் அதிகளவில் காணப்பட்டதால் இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

பனிமூட்டத்துக்கு நடுவே ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரியைச் சுற்றி குதிரை சவாரி மற்றும் சைக்கிளிங் செய்து சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்தனர்.

கொடைக்கானலில் அடர்ந்த பனிமூட்டம் - ரசித்த சுற்றுலாப் பயணிகள்
தவெகவை நெருங்கும் பாமக - இடைத்தேர்தலுக்குப் பின் கூட்டணிக் கணக்குகள் மாறுமா?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in