சுற்றுலா பயணிகளின் வருகையால் கன்னியாகுமரியில் கோடை சீஸன் களைகட்டியது

கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று சூரிய உதயத்தை காண முக்கடல் சங்கமத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்.

கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று சூரிய உதயத்தை காண முக்கடல் சங்கமத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்.

Updated on
1 min read

நாகர்கோவில்: கன்​னி​யாகுமரி​யில் சுற்றுலா பயணி​கள் வருகை அதி​கரித்​திருப்​ப​தால் கோடை சீஸன் களை​கட்​டி​யுள்​ளது. சூரிய உதயத்தை காண சுற்​றுலா பயணி​கள் ஆர்​வம் காட்​டினர்.

சுற்​றுலா தலமான கன்​னி​யாகுமரிக்கு தின​மும் ஆயிரக்​கணக்​கான உள்​நாட்டு மற்​றும் வெளி​நாட்டு சுற்​றுலா பயணி​கள் வந்து செல்​கிறார்​கள். ஞாயிறு விடு​முறையை முன்​னிட்டு நேற்று கன்​னி​யாகுமரி​யில் ஏராள​மான சுற்​றுலா பயணி​கள் குவிந்​தனர்.

முக்​கடலும் சங்​கமிக்​கும் திரிவேணி சங்​கமம் கடற்​கரை பகு​தி​யில் அதி​காலை​யில் சூரியன் உதய​மாகும் காட்​சியை காண ஏராள​மானோர் திரண்​டனர். சூரியன் உதய​மான காட்​சியை கண்டு ரசித்​தனர். சூரிய உதயம் தெளி​வாக தென்​பட்​ட​தால் மகிழ்ச்சி அடைந்​தனர்.

அதனைத்​ தொடர்ந்து கன்​னி​யாகுமரி முக்​கடல் சங்​கமத்​தில் புனித நீராடி பகவதி அம்​மன் கோயி​லில் தரிசனம் செய்​தனர். பின்​னர் நீண்ட வரிசை​யில் காத்​திருந்து படகு சவாரி செய்​தனர்.

காலை​யில் 7 மணிக்கு படகு சேவை தொடங்​கிய நிலை​யில் ஆவலுடன் படகில் பயணம் செய்து விவே​கானந்​தர் நினைவு மண்​டபத்தை பார்​வை​யிட்​டனர். கண்​ணாடி இழை கூண்டு பாலம் வழி​யாக நடந்து சென்று திரு​வள்​ளுவர் சிலையை பார்த்​தனர்.

சுற்​றுலா தலங்​களான காந்தி நினைவு மண்​டபம், காம​ராஜர் மணிமண்​டபம், சுனாமி நினை​வுப் பூங்கா உள்பட அனைத்து சுற்​றுலா தலங்​களி​லும் காலை​யில் இருந்தே கூட்​டம் நிரம்பி வழிந்​தது.

<div class="paragraphs"><p>கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று சூரிய உதயத்தை காண முக்கடல் சங்கமத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்.</p></div>
2,600 கிலோவாட் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்ய இலக்கு: சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in