நீலகிரி மாவட்டத்தில் களைகட்டியது இரண்டாம் சீசன்: வண்ண மலர்களை கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள்

ஊட்டி தாவரவியல் பூங்காவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான வண்ண மலர்களை சுற்றுலா பயணிகள் நேற்று கண்டு ரசித்தனர். படம்: ஆர்.டி.சிவசங்கர்

ஊட்டி தாவரவியல் பூங்காவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான வண்ண மலர்களை சுற்றுலா பயணிகள் நேற்று கண்டு ரசித்தனர். படம்: ஆர்.டி.சிவசங்கர்

Updated on: 
1 min read

ஊட்டி: நீல​கிரி மாவட்​டத்​தில் இரண்​டாம் சீசன் தொடங்​கிய​தால், சுற்​றுலா பயணி​கள் வருகை அதி​கரித்​துள்​ளது. பூங்​காக்​களில் பூத்​துக் குலுங்​கும் வண்ண மலர்​களை சுற்​றுலாப் பயணி​கள் கண்டு ரசித்துச் செல்​கின்​ற​னர்.

நீல​கிரி மாவட்​டத்​தில் ஏப்​ரல், மே கோடை சீசன் காலத்​தில் அதி​கள​வில் சுற்​றுலாப் பயணி​கள் ஊட்​டிக்கு வரு​வார்​கள். அதே​போல, செப்​டம்​பர் இறுதி வாரம் முதல் நவம்​பர் வரை இரண்​டாம் சீசன் கால​மாகும். இந்த காலக்​கட்​டத்​தில் பள்ளி காலாண்டு விடு​முறை மற்​றும் ஆயுத பூஜை தொடர் விடு முறை வரு​வ​தால் ஊட்​டிக்கு சுற்​றுலாப் பயணி​கள் வருகை அதி​கள​வில் இருக்​கும். மேலும், வெளி​நாட்டு பயணி​களும் 2-ம் சீசன் காலத்தில் ஊட்​டிக்கு அதி​கள​வில் வரு​கின்​ற​னர்.

நடப்​பாண்​டு, இரண்​டாம் சீசன் தொடங்​கிய நிலை​யில், ஊட்டி அரசு தாவர​வியல் பூங்​கா, குன்​னூர் சிம்ஸ் பூங்கா மற்​றும் படகு இல்​லத்​துக்கு கடந்த சில நாட்​களாக ஆயிரக்​கணக்​கான சுற்​றுலாப் பயணி​கள் வந்து சென்​றுள்​ளனர். வார இறுதி நாளான நேற்​றும் மக்​கள் கூட்​டம் அலை​மோ​தி​யது. ஊட்டி தாவர​வியல் பூங்​கா​வில் 15,000 மலர்த் தொட்​டிகள் மலர்க்​காட்சி திடலில் அடுக்கி வைக்​கப்​பட்​டுள்​ளன.

குன்​னூர் சிம்ஸ் பூங்​கா​வில் 2.50 லட்​சம் மலர் நாற்​றுக்​கள் நடவு செய்​யப்​பட்​டுள்​ளன. பூத்​துக்​குலுங்​கும் மலர்​களை கண்டு ரசிக்​கும் சுற்​றுலாப் பயணி​கள் புகைப்​படம் மற்​றும் செல்ஃபி எடுத்து மகிழ்​ந்த​னர்.

சுற்​றுலா பயணி​களின் வரு​கை​யால் ஊட்​டி​யில் இரண்​டாம் சீசன் களை​கட்​டி​யுள்​ளது. வரும் வாரங்​களில் தொடர் விடு​முறை காரண​மாக அதி​க​மான சுற்​றுலா பயணி​கள் வரு​வார்​கள் என்று எதிர்​பார்க்கப்படுகிறது.

<div class="paragraphs"><p>ஊட்டி தாவரவியல் பூங்காவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான வண்ண மலர்களை சுற்றுலா பயணிகள் நேற்று கண்டு ரசித்தனர். படம்: ஆர்.டி.சிவசங்கர்</p></div>
தாராபுரத்தில் இன்று விஜய் 30 கி.மீ. ‘ரோடு ஷோ’

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in