சுற்றுலா தலங்களில் குவிந்த மக்கள்

கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் விடுமுறை காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் நேற்று மாலை குவிந்த மக்கள் கூட்டம். | படம்: ம.பிரபு |

கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் விடுமுறை காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் நேற்று மாலை குவிந்த மக்கள் கூட்டம். | படம்: ம.பிரபு |

Updated on
1 min read

சென்னை: தொடர் விடு​முறை காரண​மாக சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் உள்ள சுற்றுலாத் தலங்​களில் மக்​கள் கூட்​டம் அலைமோ​தி​யது. கிறிஸ்​து​மஸ் பண்​டிகை நேற்று உற்​சாக​மாக கொண்​டாடப்​பட்​டது.

அத்​துடன் பள்ளி மாணவர்​களுக்​கான அரை​யாண்டு விடு​முறை​யும் தொடங்​கிய​தால், மக்​கள் பெரு​மள​வில் சுற்றுலாத் தலங்​களுக்கு சென்​றனர். மெரினா கடற்​கரை​யில் நேற்று காலை முதலே மக்​கள் குடும்​பம் குடும்​ப​மாக திரண்​டிருந்​தனர்.

<div class="paragraphs"><p>வண்டலூர் உயிரியல் பூங்காவில் விலங்குகள், பறவைகளை காண குடும்பத்துடன் திரண்ட மக்கள் கூட்டம். | படம்: எம்.முத்துகணேஷ் |</p></div>

வண்டலூர் உயிரியல் பூங்காவில் விலங்குகள், பறவைகளை காண குடும்பத்துடன் திரண்ட மக்கள் கூட்டம். | படம்: எம்.முத்துகணேஷ் |

அதே​போல் வண்​டலூர் உயி​ரியல் பூங்​கா, கிண்டி சிறு​வர் பூங்​கா, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்​கரை, கோவளம், மாமல்​லபுரம் உள்​ளிட்ட சுற்றுலாத் தலங்​களில் கூட்​டம் அலைமோ​தி​யது.

தொடர் விடு​முறை காரண​மாக 7 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் தங்​கள் சொந்த ஊர்​களுக்​கு பேருந்​து, ரயில்​களில் புறப்​பட்​டுச் சென்​ற​தால், நகரின் சாலைகளில் வழக்​க​மான வாகன நெரிசல் குறைந்து இருந்​தது.

<div class="paragraphs"><p>கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் விடுமுறை காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் நேற்று மாலை குவிந்த மக்கள் கூட்டம். | படம்: ம.பிரபு |</p></div>
வராளியில் மெய்மறக்கச் செய்த வெங்கட நாகராஜன் | சென்னை இசை அரங்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in