வராளியில் மெய்மறக்கச் செய்த வெங்கட நாகராஜன் | சென்னை இசை அரங்கம்

வராளியில் மெய்மறக்கச் செய்த வெங்கட நாகராஜன் | சென்னை இசை அரங்கம்
Updated on
1 min read

சென்னை: சென்னை மியூசிக் அகாட​மி​யில் 99-வது இசை​விழா நிகழ்ச்​சிகள் நடை​பெற்று வரு​கின்​றன. ஒவ்​வோர் ஆண்​டும் இசை​விழா​வில் 80-க்​கும் மேற்​பட்ட இசை நிகழ்ச்​சிகளும், காலை கருத்​தரங்​கு​களும் நடை​பெறு​வது வழக்​கம். அந்த வகை​யில், இந்த ஆண்டு இசை விழாவில் இளம் வித்​வான் வி.வெங்கட நாக​ராஜனின் இசை நிகழ்ச்சி நடை​பெற்​றது.

அவருக்கு பக்​கபல​மாக விக்​னேஷ் தியாக​ராஜன் (வயலின்), திப்​பி​ராஜபுரம் ஹரி (மிருதங்​கம்), மஞ்​சேஷ் மோக​னன் (கடம்) இருந்​தனர். ‘வனஜாக் ஷி’ எனத் தொடங்​கும் தஞ்சை வடிவேலு​வின் சாவேரி ராக வர்​ணத்​துடன் கச்​சேரியைத் தொடங்​கி​னார் வெங்கட நாக​ராஜன். அடுத்​த​தாக, முத்​துஸ்​வாமி தீட்​சிதரின் நாட்டை ராக க்ரு​தியை (ஸ்​வாமி​நாத பரி​பால​யாசு​மாம்) பாடி​னார்.

சிறிய ஆலாபனைக்​குப் பிறகு, ரீதி​கௌளை ராகத்​தில் அமைந்த சுப்​ப​ராய சாஸ்​திரி​யின் பாடலை (ஜனனி நின்னு வினா) பாடி​னார். இதில் ஒரு குழந்தை தன் தாயிடம், “உன்​னை​விட என்னை கவனித்​துக் கொள்ள வேறு யார் இருக்​கிறார்​கள்?” என்று கேட்​பது​போல, தேவியைக் கேட்​கிறார் சுப்​ப​ராய சாஸ்​திரி.

பின்​னர், பாப​நாசம் சிவனின் பிரபல​மான மாயா​மாளவ கௌளை ராகத்​தில் அமைந்த ‘பொல்லா புலி​யினும்’ எனத் தொடங்​கும் பாடலைப் பாடி​னார் வெங்கட நாக​ராஜன். பிர​தான ராக​மாக சங்​க​ராபரணம் அமைந்​தது. விஸ்​தா​ர​மான ஆலாபனைக்​குப் பிறகு, தியாக​ராஜ சுவாமி​யின் ‘எந்​துகு பெத்​தல’ கீர்த்​தனையைப் பாடி​னார். ‘வேத சாஸ்த்ர தத்​வார்த்​த​மு’ என்ற வரியை நிர​வல் செய்​து, ஸ்வரக் கோர்​வை​களைப் பாடி​னார்.

இந்த கீர்த்​தனை​யில், சான்​றோர் பெரு​மக்​களைப் போன்ற ஞானத்​தை, தனக்கு அருளு​மாறு ராமபி​ரானை தியாக​ராஜர் வேண்​டு​கிறார். ராகம் தானம் பல்​லவிக்கு வித்​வான் டி.என்​.சேஷகோ​பாலனின் வராளி ராக பல்​ல​வியைத் தேர்வு செய்​தார் வெங்கட நாக​ராஜன். ‘அம்​பிகை ஜகதம்​பிகைவராளிதோ ஸ்ரு​தி​யோடு லயமும் தராளிதோ’ என்ற பல்​ல​வியை த்ரி​காலத்​தில் பாடி, அதற்கு அழகு சேர்த்​தார்.

தனி ஆவர்த்​தனத்​தில் திப்​பி​ராஜபுரம் ஹரி, மஞ்​சேஷ் மோக​னன் தங்​கள் மிருது​வான வாசிப்​பில் ரசிகர்​களை தாளம் போட வைத்​தனர். பாடகரைத் தொடர்ந்​த​படி இருந்த விக்​னேஷ் தியாக​ராஜன், சங்​க​ராபரண ராக ஆலாபனை​யிலும், ராகம் தானம் பல்​ல​வி​யிலும் முத்​திரை பதித்​தார்.

‘ஊரிலேன் காணி​யில்லை உறவு மற்​றொரு​வர் இல்​லை’ எனத் தொடங்​கும் தொண்​டரடிப்​பொடி ஆழ்​வாரின் பாசுரத்தை காபி ராகத்​தில் விருத்​த​மாகப் பாடி, சுத்​தானந்த பார​தி​யின் ‘ஆடு​கிறான் என்​னுள் பாடு​கிறான் கண்​ணன்’ என்ற பாடலைப் பாடி கச்​சேரியை நிறைவு செய்​தார் வெங்கட நாக​ராஜன்.

சென்னை ஐஐடி​யில் மேலாண்மை ஆய்​வு​கள் துறை​யில் மனிதவளப் பிரி​வில் முனை​வர் பட்​டம் பெற்​றுள்ள வெங்கட நாக​ராஜன் தற்​போது கிரியா பல்​கலைக்​கழகத்​தில் உதவிப் பேராசிரிய​ராக பணிபுரிந்து வரு​கிறார். 15 ஆண்​டு​களுக்​கும் மேல், விதூஷி திருச்சி அம்​புஜம் வேதாந்​தத்​திடம் இசை பயின்ற இவர், தற்​போது வித்​வான் சஞ்​சய் சுப்​பிரமணி​யனிடம் இசை பயின்று வருகிறார்.

வராளியில் மெய்மறக்கச் செய்த வெங்கட நாகராஜன் | சென்னை இசை அரங்கம்
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in