ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட கோடை வாசஸ்தலங்களில் குவிந்த மக்கள்

சீசன் தொடங்கியதால் உள்ளூர் வியாபாரிகள் மகிழ்ச்சி
கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்.

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்.

Updated on
2 min read

ஊட்டி / சேலம் / பழநி: கோடை சீசன் தொடங்​கி​யுள்​ள​தால் ஊட்​டி​, கொடைக்கானல், ஏற்காடு போன்ற கோடை வாசஸ்தலங்களில் சுற்​றுலா பயணி​கள் கூட்​டம் அதி​கரித்​துள்​ளது.

சமவெளி பகு​தி​களில் கோடைவெயி​லின் தாக்​கம் அதி​கரித்​துள்​ளது. இதற்​கிடையே கடந்த சில நாட்​களுக்கு முன் பிளஸ்-2 மற்​றும் பத்​தாம் வகுப்பு பொதுத்​தேர்​வு​கள் நிறைவடைந்து பள்​ளி​களுக்கு கோடை விடு​முறை விடப்​பட்​டது. மேலும், தமிழ்​நாட்​டில் தற்​போது தேர்​தலும் முடிவடைந்​துள்​ளது. இதனால், கோடை விடு​முறையை இதமாக கழிக்க, நீல​கிரி மாவட்​டத்​துக்கு சுற்​றுலாபயணி​கள் வருகை அதி​கரித்துவரு​கிறது.

ஊட்டி ரோஜா பூங்​கா​வில் பல வண்​ணங்​களில் பூத்​துக்குலுங்​கிய ரோஜா மலர்களைகண்டு ரசித்​தனர். கேரளம், கர்நாடகா போன்ற வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதே​போல் குன்​னூர், கோத்​தகிரி, அவலாஞ்சி உள்​ளிட்ட பல்​வேறு இடங்​களி​லும் சுற்​றுலா பயணி​கள் வருகை அதிக அளவில் இருந்​தது. சுற்​றுலா பயணி​கள் வருகை அதி​கரித்​ததன் காரண​மாக வியா​பாரம் சூடு​பிடித்​துள்​ள​தால், வியா​பாரி​கள் மகிழ்ச்​சி​யடைந்​துள்​ளனர்.

ஏற்காடு: இதே​போல் ஏற்​காட்​டில் சுற்​றுலா பயணி​கள் குவிந்​தனர். கோடை​கால வெப்​பம் மாணவர்​களுக்கு தொடர் விடு​முறை போன்ற காரணங்​களால் பலரும் குடும்​பத்​துடன் ஏற்​காடுக்கு சுற்​றுலா வரு​கின்​றனர். இங்கு நிலவி வரும் குளு​மை​யான சீதோஷண நிலையை அனுபவிக்க பலரும் ஆர்​வ​முடன் வந்து செல்​கின்​றனர். இதனால், சாலை​யோர கடைகளில் வியா​பாரம் களைக்​கட்​டியது. படகுத்துறை, மான் பூங்​கா, பகோடா பாயின்ட், தாவர​வியல் பூங்​காக்​களில் கூட்டம் அலைமோதியது.

<div class="paragraphs"><p>ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகையில் மலர்களை காண குவிந்த சுற்றுலா பயணிகள். படம்:ஆர்.டி.சிவசங்கர்</p></div>

ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகையில் மலர்களை காண குவிந்த சுற்றுலா பயணிகள். படம்:ஆர்.டி.சிவசங்கர்

கொடைக்கானல்: இதே​போல கொடைக்​கானலுக்​கும் நேற்று காலை முதலே சுற்​றுலா பயணி​கள் வருகை அதி​கரித்​தது. இங்​குள்ள பிரையன்ட் பூங்​கா, ரோஜா பூங்​கா, குணா குகை, மோயர் சதுக்​கம், பசுமை பள்​ளத்​தாக்​கு, தூண்​பாறை, பைன் பாரஸ்ட், கோக்​கர்ஸ் வாக் உள்​ளிட்ட இடங்​களில் வெளி​மாவட்​டம் மட்​டுமின்றி கேரளா, ஆந்​தி​ரா, கர்​நாடகா ஆகிய வெளி​மாநிலங்​களில் இருந்​தும் சுற்​றுலா பயணி​கள் அதிக அளவில் வந்​திருந்​தனர்.

சுற்​றுலா பயணி​கள் நீண்ட வரிசை​யில் காத்​திருந்து ஏரி​யில் படகு சவாரி மற்​றும் குதிரை சவாரி, சைக்​கிள் ஓட்டி மகிழ்ந்​தனர்.கொடைக்​கானலில் நேற்று பகலில் 26 டிகிரி செல்​சி​யஸ், இரவில் 15 டிகிரி செல்​சி​யஸ் வெப்​பநிலை நில​வியது.கோடை சீசனை முன்​னிட்டு சுற்​றுலா பயணி​களின் வருகையால் உள்ளூர் வியா​பாரி​கள், மகிழ்ச்சி அடைந்​துள்​ளனர்.

<div class="paragraphs"><p>கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்.</p></div>
அதிமுகவினரை தாக்கிய திமுகவினர் மீது நடவடிக்கை தேவை: பழனிசாமி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in