‘குட்டி மெரினா’ கடற்கரை போல் மாறும் மதுரை வண்டியூர் கண்மாய் பூங்கா!

கடற்கரை போல் அமைக்கப்பட்டு வரும் வண்டியூர் கண்மாய் பூங்காவின் தோற்றம்.

கடற்கரை போல் அமைக்கப்பட்டு வரும் வண்டியூர் கண்மாய் பூங்காவின் தோற்றம்.

Updated on
2 min read

மதுரை: ரூ.50 கோடியில் தனித்தீவு, படகு சவாரி, உடற்பயிற்சிக்கூடம், குழந்தைகள் விளையாட்டரங்கம் ஆகியவற்றுடன் மதுரை வண்டியூர் கண்மாய் ‘குட்டி மெரினா’ கடற்கரைபோல் மாற்றப்பட்டுள்ளது. மேம் படுத்தும் பணிகள் நிறைவடைய உள்ளதால் அடுத்த மாதம் திறக்கப்படுகிறது.

மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில், திருமலை நாயக்கர் மகால், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், அழகர் கோயில் மற்றும் காந்தி அருங்காட்சியகம் போன்ற இடங்கள் வெளியூர் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழிந்தாலும், உள்ளூர் மக்களுக்கு தினசரி பொழுது போக்க மால்களையும், திரையரங்குகளையும் விட்டால் வேறு இடமில்லாத நிலையே நீடிக்கிறது.

மதுரை மக்களின் அக்குறையைப் போக்க மாநகராட்சி சார்பில் 450 ஏக்கரில் ஆண்டு முழுவதும் தண்ணீர் நிரம்பி காணப்படும் வண்டியூர் கண்மாய் பூங்காவை ரூ.50 கோடி மதிப்பில் சுற்றுலா தலமாக மாற்றும் பணி நடந்து வருகிறது. கடற்கரைபோல் கண்மாயை ரசித்துக்கொண்டே குளிர்ந்த காற்றை அனுபவிக்க கரைகளில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

1982-ம் ஆண்டில் மதுரையில் நடந்த உலக தமிழ் மாநாட்டில் அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் வண்டியூர் கண்மாயை ஆழப்படுத்தி படகு போக்குவரத்துடன் கூடிய சிறந்த பொழுதுபோக்கு மையமாக மாற்றப்படும் என அறிவித்தார். அவரின் அந்த தொலைநோக்கு அறிவிப்பு தற்போது நடைமுறைக்கு வருகிறது. மதுரை மாநகராட்சி ஆணையர் சித்ராவின் நடவடிக்கையால் தற்போது 85 சதவீதம் பணிகள் நிறைவுபெற்றுள்ளன.

மாநகராட்சி பொறியியல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: கண்மாயைச் சுற்றிலும் 3.2 கி.மீ. தூர நடைபாதை உருவாக்கப்பட்டுள்ளது. கண்மாயின் மையத்தில் சிறிய தீவு உருவாக்கப்பட்டு, அங்கு பொதுமக்கள் மிதக்கும் ரப்பர் பாலம் வழியாக நடந்து சென்றும், படகு சவாரி சென்றும் கண்மாயின் அழகை ரசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வண்டியூர் கண்மாய் பூங்காவில் அமைக்கப்பட்டு வரும் நடைபயிற்சி பாதை.

வண்டியூர் கண்மாய் பூங்காவில் அமைக்கப்பட்டு வரும் நடைபயிற்சி பாதை.

அதற்காக கண்மாயில் தேங்கி நிற்கும் ஆகாயத்தாமரை செடிகள் அகற்றப்பட்டு, தண்ணீரை சுத்தம் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. இளைஞர்கள் உடற்பயிற்சி மேற்கொள்ள உடற்பயிற்சிக் கூடம், பெரியவர்களுக்கு யோகா மண்டபம் அமைக்கப்படுகின்றன. நவீன கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.

குழந்தைகள் ஸ்கேட்டிங், சைக்கிளிங் செல்வதற்கு தனி டிராக்குகளும், அவர்கள் விளையாடுவதற்கு பல்வேறு விளையாட்டு உபகரணங்களுடன் சிறு விளையாட்டு அரங்கும் உருவாக்கப்பட்டுள்ளது. கண்மாய் கரைகளிலும், நடைபயிற்சி பாதைகளிலும் மின் விளக்குகள் அமைக்கும் பணிகள் நடக்கின்றன.

ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டுள்ள நிலையில் வண்டியூர் கண்மாய்.

ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டுள்ள நிலையில் வண்டியூர் கண்மாய்.

சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்பு பிப்ரவரி மாதத்தில் இந்த பூங்காவை திறக்கும் வகையில் இறுதிக்கட்ட பணிகளை ஆணையர் சித்ரா முடுக்கி விட்டுள்ளார், என்று கூறினர்.

நுழைவு வாயில்களும் வாகன நிறுத்தமும்:

வண்டியூர் பூங்காவுக்கு பழம் மார்க்கெட் எதிர்புறம், சுந்தரம் பூங்கா பழைய நுழைவு வாயில் ஆகிய இடங்களில் 2 பிரதான நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் இவ்வாயில்கள் வழியாக அனுமதிக்கப்படுவார்கள். மாநகராட்சி அதிகாரிகள் வந்து செல்வதற்காக கே.கே.நகர் என்ஃபீல்டு ஷோரூம், ஹோண்டா ஷோரூம் ஆகிய 2 இடங்களில் மேலும் 2 பிரத்யேக நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் கண்மாயின் கிழக்குப் பகுதியில் பாண்டி கோயில் சுற்றுச்சாலையில் ஒரு அலங்கார வளைவுடன் (ஆர்ச்) கூடிய திறந்தவெளி நுழைவு வாயிலும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வழியாகவும் பொதுமக்கள் பூங்காவுக்கு வந்து செல்லலாம். கார், இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு லேக் வியூ சாலையிலும், சுற்றுச்சாலையில் பாண்டி கோயில் அருகிலும் வாகன நிறுத்த வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடற்கரை போல் அமைக்கப்பட்டு வரும் வண்டியூர் கண்மாய் பூங்காவின் தோற்றம்.

நாட்டியத்தில் உயிர்த்த ராமாயண கதை மாந்தர்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in