நாட்டியத்தில் உயிர்த்த ராமாயண கதை மாந்தர்கள்

வினிஷா கதிரவன்

வினிஷா கதிரவன்

Updated on
1 min read

சென்னை: ​ராமாயணக் கதைகளை கேட்​கும்​ போது மனதுக்​குள் காட்​சிகள் விரி​யும். ராமாவ​தா​ரம், சீதா கல்​யாணம், வனவாசம் தொடங்கி பட்​டாபிஷேகம் வரை முக்​கிய அம்​சங்​கள் அனைத்​தும் கண் முன்னே நாட்​டிய​மாக வடிவ​மைக்​கப்​பட்​டால் சிறப்​பு​தான்.

சென்னை தியாக​ராய நகரில் உள்ள பாரத் கலாச்​சார் அரங்​கில் மார்​கழி மகோற்​சவத்​தின் ஒரு பகு​தி​யாக மருத்​து​வர் வினிஷா கதிர​வனின் நாட்​டிய நிகழ்ச்சி நடை​பெற்​றது. நிகழ்ச்​சி​யின் முக்​கிய அம்​ச​மாக ‘ராம காதை’ இருந்​தது.

ராம காதை​யின் காட்​சிகள் கண்​முன் விரிந்​தன. ராமபி​ரான் அவதா​ரம், அடுத்​தடுத்து இலக்​கு​வன், விசு​வாமித்​திரர், அகலிகை தொடர்​பான காட்​சிகள், சீதையை மணக்க போட்டி போட்டு வில்​லொடிக்க வந்த வேந்​தர்​கள், சீதை​யின் சுயம்​வரம், வனம் புகுதல், சூர்ப்​பனகை​யின் அறு​பட்ட மூக்​கு, ராவணன், அனு​மன், கணை​யாழி பெறல், கண்​டேன் சீதையை, ராம சேது பந்​தனம், போர், பட்​டாபிஷேகம் என ராமாயணக் காட்​சிகள் கண்​களுக்கு விருந்​தாக அமைந்​தன. ராமாயணமும் ரசிகர்​களின் மனதில் நன்​றாக பதிந்​தது.

வினிஷா கதிர​வனின் அபிந​யம், கதை சொல்​லும் திறன், உணர்​வு​களை வெளிப்​படுத்​தும் உடல் மொழி ஆகியவை பார்​வை​யாளர்​களை ஆர்​வம் குறை​யாமல் ரசிக்க வைத்​தன.

முக​பாவங்​கள், கண் அசைவு​கள், உதடு அசைவு​கள் ராமாயணக் கதா​பாத்​திரங்​களை உயிர்ப்​புடன் கண்​முன் நிறுத்​தின. எழுத்​தாளர் பால​கு​மாரன், பத்​மபூஷண் வி.பி.தனஞ்​செயன், சாந்தா தனஞ்​செயன், பாரத் கலாச்​சார் இணைச் செயலர் சுதா மகேந்​திரன், சித்த மருத்​து​வர் கு.சிவ​ராமன் ஆகியோ​ரால் பாராட்​டப்​பட்ட மருத்​து​வர் வினிஷா கதிர​வன், நாட்​டிய குரு ஊர்​மிளா சத்​தி​ய​நா​ராயணனின் மாணவி ஆவார்.

“மருத்​து​வம் என் வாழ்க்​கை; பரதம் என் மூச்​சு” என்று தெளி​வாகச் சொல்​லும் வினிஷா, ‘யுவ கலா பார​தி’, ‘நாட்​டிய நிபுண’ உள்​ளிட்​ட பல விருதுகளைப்​ பெற்​றுள்​ளார்​.

<div class="paragraphs"><p>வினிஷா கதிரவன்</p></div>
அடகு கடையில் நள்ளிரவில் திருட்டு முயற்சியை தடுத்த உரிமையாளர்: பிஹாரைச் சேர்ந்த இளைஞர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in