ஐ.ஆர்​.சி.டி.சி சார்பில் காசி தீர்த்த யாத்ரா சிறப்பு ரயில்

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: இந்​திய ரயில்வே உணவு மற்​றும் சுற்​றுலா கழகம் (ஐஆர்சிடிசி) சார்​பில், ஆன்​மீக சுற்​றுலா, கல்வி சுற்​றுலா, கோடை​கால சுற்​றுலா உள்பட பல்​வேறு சுற்​றுலா திட்​டங்​கள் செயல்​படுத்​தப்​படு​கின்​றன.

அந்த வகை​யில், காசி தீர்த்த யாத்ரா என்ற பெயரில் பாரத் கவுர சுற்​றுலா ரயில் இயக்​கப்​பட​வுள்​ளது. இந்த ரயில் திருநெல்​வேலி​யில் இருந்து செப்​.9-ம் தேதி புறப்​படு​கிறது. இந்த ரயில் விருதுநகர், மதுரை, திண்​டுக்​கல், திருச்​சி, விருத்​தாசலம், விழுப்​புரம், செங்​கல்​பட்​டு, சென்னை வழி​யாக கயா, காசி (வாரணாசி), பிர​யாக்​ராஜ், அயோத்தி ஆகிய இடங்​களுக்கு பயணி​கள் அழைத்து செல்​லப்பட உள்​ளனர்.

இந்த ரயில் செப்​.17-ம் தேதி திருநெல்​வேலியை மீண்​டும் அடைகிறது. இந்த ரயி​லில் ஒரு ஏசி இரண்​டடுக்கு பெட்​டி, 7 மூன்​றடுக்கு ஏசி பெட்​டிகள், 3 தூங்​கும் வசதி​கொண்ட இரண்​டாம் வகுப்பு பெட்​டிகள் இணைக்​கப்​பட்​டுள்​ளன. மேலும் விவரங்​களுக்கு ஐஆர்​சிடிசி இணை​யதளத்​தில் அறிய​லாம். இத்​தகவல் தெற்கு ரயில்வே செய்​திக்​குறிப்​பில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளன.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
பாஸ்போர்ட், ஆதார், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டையால் குடியுரிமையை நிரூபிக்க முடியுமா?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in