கோடை சீசனை முன்னிட்டு 3 மாத காலம் நீலகிரி பூங்காக்களில் படப்பிடிப்பு நடத்த தடை

பசுமை பொங்கும் ஊட்டி தாவரவியல் பூங்கா புல்தரை.

பசுமை பொங்கும் ஊட்டி தாவரவியல் பூங்கா புல்தரை.

Updated on
1 min read

ஊட்டி: கோடை சீசனையொட்டி ஊட்டி அரசு தாவர​வியல் பூங்​கா, ரோஜா பூங்கா உள்​ளிட்ட பூங்​காக்​களில் சினிமா படப்​பிடிப்​புக்கு தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது.

மலைகளின் அரசி​யான நீல​கிரி மாவட்​டம் ஊட்​டி​யில் தேயிலை தோட்​டங்​கள், பசுமை​யான புல்​வெளி​கள், சுற்​றுலா தலங்​களை கண்டு ரசிக்க சுற்​றுலா பயணி​கள் அதிக எண்​ணிக்​கை​யில் வரு​வார்​கள்.

இதே​போல் மற்​றொரு​புறம் சினிமா படப்​பிடிப்பு நடைபெறு​வது வழக்​கம். இயற்கை காட்​சிகள், மலைகளை மோதி செல்​லும் மேகக்​கூட்​டம் போன்​றவற்றை படம் பிடிக்​கின்​றனர்.

குறிப்​பாக தமிழ், மலை​யாளம், தெலுங்​கு, இந்தி சினி​மாக்​கள் ஊட்​டி​யில் படமாக்​கப்​படு​கின்​றன. நீலகிரி மாவட்​டத்​தில் உள்ள தோட்​டக்​கலை பூங்​காக்​களில் கட்​ட​ணம் அடிப்​படை​யில் சினிமா படப்​பிடிப்​புக்கு அனு​மதி வழங்​கப்​பட்டு வரு​கிறது.

இதற்கு சென்​னை​யில் உள்ள தோட்​டக்​கலைத்​துறை இயக்​குநரிடம் அனு​மதி பெற வேண்​டும். ஊட்டி அரசு தாவர​வியல் பூங்​கா, ரோஜா பூங்​கா, மரவியல் பூங்​கா​வில் படப்​பிடிப்​புக்கு ரூ.50 ஆயிரம், தேயிலை பூங்​கா​வில் ரூ.25 ஆயிரம் கட்​ட​ண​மாக நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.

வெளி​நாட்டு மரங்​கள், பசுமை​யான புல்​வெளி​கள், கண்​ணாடி மாளிகை, பூத்து குலுங்​கும் மலர்​கள் சினி​மா​வில் இடம் பெறுகின்​றன. இந்​நிலை​யில், நீல​கிரி மாவட்​டத்​தில் ஆண்​டு​தோறும் ஏப்​ரல், மே மாதங்​களில் கோடை சீசன் நடை​பெறுகிறது.

இந்த சீசனில் வெளி​மாநிலங்​கள், பிற மாவட்​டங்​களில் இருந்து சுற்​றுலா பயணி​கள் லட்​சக்​கணக்​கானோர் ஊட்​டிக்கு வரு​கின்​றனர். அவர்​களை மகிழ்விக்​கும் வகை​யில் கோடை விழா, கண்​காட்​சிகள் நடத்​தப்​படு​கின்​றன.

சுற்​றுலா பயணி​கள் அதிகளவில் வரு​வ​தால், கோடை சீசனில் தாவர​வியல் பூங்​காவில் சினிமா படப்​பிடிப்புக்கு நிலையான தடை உத்​தரவு கடந்த சில ஆண்டுகளாக அமலில் உள்​ளது.

இதனால் இன்று (ஏப்.1) முதல் தாவரவியல் பூங்​கா, சிம்ஸ் பூங்கா உட்பட மாவட்​டத்​தில் உள்ள 8 தோட்​டக்​கலை பூங்​காக்​களி​லும் சினிமா படப்​பிடிப்புக்கு தடை விதிக்​கப்​பட்டு உள்​ளது.

இதுகுறித்து தோட்​டக்​கலைத் துறை இணை இயக்​குநர் நவநீதா கூறும் போது, ‘கோடை சீசனை முன்னிட்டு ஊட்டி அரசு தாவர​வியல் பூங்கா​வுக்கு சுற்​றுலா பயணி​கள் வழக்​கத்​தை​விட அதிக அளவில் வரு​வார்​கள்.

மேலும் நடை​பாதையோரம், மலர் பாத்​திகளில் மலர் செடிகள் நடவு செய்​யப்​பட்டு உள்​ளன. செடிகளுக்கு சேதம் ஏற்​படு​வதை தவிர்க்​க​வும், சுற்​றுலா பயணி​களுக்​கு இடையூறு இல்​லாமல்​ இருக்​க​வும்​ ஏப்​ரல்​, மே, ஜூன்​ ஆகிய 3 ​மாதங்​கள்​ சினிமா படப்​பிடிப்புக்கு அனு​மதி இல்லை’ என்​றார்​.

<div class="paragraphs"><p>பசுமை பொங்கும் ஊட்டி தாவரவியல் பூங்கா புல்தரை. </p></div>
திருச்சி திருவெறும்பூர் அருகே திமுக கவுன்சிலர் மர்ம கும்பலால் படுகொலை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in